Greedy Women: இருக்கிறதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பெண்கள்.. இந்த ராசிகளை உடையவர்கள் தானாம்!-greedy women belong to this sign - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Greedy Women: இருக்கிறதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பெண்கள்.. இந்த ராசிகளை உடையவர்கள் தானாம்!

Greedy Women: இருக்கிறதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பெண்கள்.. இந்த ராசிகளை உடையவர்கள் தானாம்!

Marimuthu M HT Tamil
Jan 29, 2024 04:31 PM IST

பேராசை படும் பெண்கள் இந்த ராசியினர் தான் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இருக்கிறதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பெண்கள்.. இந்த ராசிகளை உடையவர்கள் தானாம்!
இருக்கிறதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பெண்கள்.. இந்த ராசிகளை உடையவர்கள் தானாம்!

மேஷம்: இவர்கள் உறுதிமிக்க ராசியினராக இருந்தாலும் ஊக்கமிக்க ராசியினராக இருந்தாலும் இவர்களிடையே இயல்பிலேயே பேராசை குணம் மேலோங்கி நிற்கும். இந்தப் பேராசையால் அவர்களின் இலக்குகளை நோக்கிப் பயணிப்பவர்கள் முன்னேறுகிறார்கள். சமூகத்தில் சில எதிர்பிரச்னைகளையும் உண்டாக்குகிறார்கள்.

சிம்மம்: இந்த ராசியினர் இடையே கரிஷ்மா எனப்படும் ஒரு ஈர்ப்பு இருப்பது இயல்புதான். ஆனால்,இந்த ராசிப்பெண்கள் எதிலும் நிறைவுபெறமாட்டார்கள். உண்மையில் சிம்ம ராசிப்பெண்கள், தன்னை மற்றவர்கள் நிறைய புகழ வேண்டும்; தன்னை அழகானவர் என அதிகம்பேர் சொல்லவேண்டும் என்றும் பேராசை கொண்டிப்பார்கள்.

விருச்சிகம்: இந்த ராசிப் பெண்கள், உடனே ஜெயிக்கவேண்டும் உடனே கோடீஸ்வரராக வேண்டும் என நினைப்பார்கள், அதுவும் குறைவான உழைப்பினை முதலீடாகப் போட்டுவிட்டு. மேலும் ஆர்வமிகுதியால் அல்லல்படுபவர்களாகவும் இருப்பார்கள். தனிப்பட்ட வளர்ச்சியில் மிகவும் பேராசைமிக்கவர்களாக இருப்பார்கள். மேலும் தனக்கான அதிகாரம் விரைவில் கிடைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பார்கள். அது பல இடங்களில் தவறி,தோல்வி அடையும்போது, அந்தத் தோல்வியை உடனடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, இதை அறிந்துகொண்டபின், உங்களை சீர்திருத்தம் செய்துகொள்ளுங்கள்.

மகரம்: இந்த ராசிப் பெண்களுக்கு பொருள் மீதும் ஆடம்பர வாழ்க்கையின் மீது இடைவிடாத ஈர்ப்பு இருக்கும். மகர ராசியினர் விடாமுயற்சியுடன் அணுகாமல் வெற்று நம்பிக்கையில் மட்டுமே உழலக்கூடியவர்கள். அதை மாற்றமுயற்சிப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்