தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Govt Jobs: ’ராசி எதுவானாலும் பரவாயில்ல! சூரியன், சந்திரன் தரும் அரசு வேலை யோகம் யாருக்கு?’ இதோ முழு விவரம்!

Govt Jobs: ’ராசி எதுவானாலும் பரவாயில்ல! சூரியன், சந்திரன் தரும் அரசு வேலை யோகம் யாருக்கு?’ இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
May 16, 2024 06:15 AM IST

Govt job: ஒருவர் அரசு பணியில் சேர சூரியன் அல்லது சந்திரன் பலமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

’ராசி எதுவானாலும் பரவாயில்ல! சூரியன், சந்திரன் தரும் அரசு வேலை யோகம் யாருக்கு?’ இதோ முழு விவரம்!
’ராசி எதுவானாலும் பரவாயில்ல! சூரியன், சந்திரன் தரும் அரசு வேலை யோகம் யாருக்கு?’ இதோ முழு விவரம்!

அரசு பணியும்! சூரியன் சந்திரன் வலுவும்!

ஒருவருக்கு அரசு பணிகள் மீது ஆர்வம் பிறக்க அவரது ஜாதகத்தில் ஆளுமையை குறிக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகங்கள் வலுவுடன் இருப்பது அவசியம் ஆகும். 

அரசு பணிகளில் வேலை செய்பவர்களுக்கு சூரியனோ அல்லது சந்திரனோ பலமாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

அரசு அல்லது அரசு சார்ந்த பணிகளில் வேலை!

அதன்படி சூரியன் உச்சம் பெறும் மேஷம் லக்னத்தினரும், சந்திரன் உச்சம் பெறக்கூடிய ரிஷபம் லக்னத்தினரும், சூரியன் ஆட்சி பெறக்கூடிய சிம்ம லக்னத்தினரும், சந்திரன் ஆட்சி பெறக்கூடிய கடக லக்னத்தினரும் அரசுப்பணிகளில் அதிகம் இருப்பார்கள். 

நேரடியாக அரசுப்பணிகளில் இல்லாவிட்டாலும், இவர்களை சார்ந்த யாராவது ஒருவர் அரசுப்பணிகளில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

திக்பலமும் அரசு வேலையும்

ஒருவரது ஜாதகத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகங்கள் திக்பலம் அடைந்தல் அரசுப்பணி கிட்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

சூரியன் நண்பகல் நேரத்தில் உச்சி வானில் இருக்கும் போது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு லக்னத்தில் இருந்து 10ஆவது வீட்டில் சூரியன் இருப்பார். அதனால் அந்த ஜாதகர் திக்பலம் என்ற வலிமையை பெறுகிறார். 

அதே போல் சந்திரன் 4ஆம் இடத்தில் திக்பலம் அடைவதால் ஒருவரது ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் அவருக்கு அரசுப்பணி கிடைப்பதற்கான சாத்தியக்குறுகள் அதிம் ஆகும். 

மூலத்திரிகோணமும் அரசு வேலையும்

அதே போல் சூரியனும், சந்திரனும் மூலத்திரிகோணம் பெறக்கூடிய வீடுகளில் வலுவான கிரகங்கள் இருந்தால் அரசு வேலை உறுதி ஆகும். 

உதாரணமாக சிம்மத்தில் வலுவகான கிரகங்களான சூரியன், குரு, செவ்வாய், புதன் ஆகிய கோள்கள் இருந்தால் அரசு வேலையில் அதிக நாட்டமும், ஆர்வமும் ஏற்படும்.

ரிஷபத்தில் சந்திரன், சுக்கிரன், சனி பகவான், குரு பகவான் ஆகியோர் இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதற்கான சூழல் அதிகம் உண்டு. 

கேந்திரமும் அரசு வேலையும்!

ஒளி கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரமாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு அரசு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 

உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் சூரியன் திக்பலம் பெற்று, அவருக்கு 4, 7, 10ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் அரசு வேலை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

உங்கள் லக்னத்திற்கு கேந்திரமாக சூரியனும், சந்திரம்னும் அமைய பெற்று தங்களுக்குள் கேந்திரமாக வலுப்பெறுவது மிகச்சிறப்பு ஆகும். இதனாலும் ஜாதகருக்கு அரசு வேலை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.   

அதே போல் ஒருவரது ஜாதகத்தில் மேஷம் ராசியில் வலுவான கிரகங்கள் இருந்தாலே அரசு பணிகளின் மீது அதிக ஆர்வம் இருக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel