'தங்கம், நிலம், பணம் மென்மேலும் பெருக இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள் - கடன் நீங்கும்.. மகாலட்சுமி அருள் உங்களுக்குத்தான்!
வெள்ளிக்கிழமையும் நாம் இந்த பன்னீர் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து என்றென்றைக்கும் நம்முடனே இருப்பாள். இந்த தீபத்தை முழு மனதோடு மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.
நீங்க எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் தொடர்ந்து பிரச்சினைகள் உங்களை துரத்துகிறது. ஒரு கடனை கட்டி முடிப்பதற்குள் அடுத்த கடன் வாங்கும் சூழலால் மிகவும் கஷ்டப்படுகிறீர்களா.. அப்படி என்றால் நீங்கள் இந்த பன்னீர் நெய் தீபத்தை ஏற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள். உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த தீபத்தை 16 வெள்ளிக்கிழமை ஏற்றலாம். 16 வாரங்கள் முடிந்த பின் இரண்டு மூன்று வாரங்கள் விட்டுவிட்டு மீண்டும் 16 வாரங்கள் ஏற்றலாம். இப்படி தொடர்ச்சியாக இந்த தீபத்தை நாம் ஏற்றிக் கொண்டே வரலாம். இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றுவது என்பது விஷேசமான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஏற்றலாம். இல்லையென்றால் மாலை நேரத்தில் இந்த தீபத்தை இந்த தீபத்தை ஏற்றி மனமுருகி லட்சுமி தேவியை வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.
நாம் தீபம் ஏற்றுதற்கு காட்டன் துணியையும், ஒரு பாட்டில் பன்னீரையும் வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு பாத்திரத்தில் இந்த பன்னீரை ஊற்றி அந்த பன்னீருக்குள் நாம் வாங்கி வந்த துணியை போட்டு நன்றாக நனைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் முதல் ஒரு மணி நேரம் வரை அந்த துணி பன்னீரில் நன்றாக ஊற விட வேண்டும். பின்னர் அந்த துணியை எடுத்து பிழியாமல் அப்படியே நிழலில் உலர்த்த வேண்டும். இந்த துணி நன்றாக காய்ந்ததும் இதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தீபம் ஏற்றும் முறை
வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் நாம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நேரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த காட்டன் துணியை எடுத்து இரண்டு திரிகள் அளவிற்கு மட்டும் நறுக்கி எடுத்து ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் வெள்ளி விளக்கு இருக்கும் பட்சத்தில் அந்த வெள்ளி விளக்கில் இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலனை தரும். இயலாதவர்கள் மண் அகல் விளக்கிலோ பித்தளை விளக்கிலோ ஏற்றலாம். சுத்தமான பசு நெய்யை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பன்னீர் திரியை போட்டு நன்றாக திரித்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
மகிழ்ச்சி பொங்கும்
இந்த பன்னீர் நெய் தீபம் மகாலட்சுமி தேவிக்கு முன்பாக ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாருடைய மந்திரங்களையோ, ஸ்லோகங்களையோ, கவசங்களையும் பாராயணம் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வாசனை நிறைந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் இந்த பன்னீர் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து என்றென்றைக்கும் நம்முடனே இருப்பாள் என்று கூறப்படுகிறது.
இந்த தீபத்தை முழு மனதோடு மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்