தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gemini Daily Horoscope: ஆரோக்கியத்தில் அசால்டு வேணாமே.. முதலீட்டில் கவனம்!- மிதுனத்திற்கான ராசி பலன்கள்!

Gemini Daily Horoscope: ஆரோக்கியத்தில் அசால்டு வேணாமே.. முதலீட்டில் கவனம்!- மிதுனத்திற்கான ராசி பலன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
May 03, 2024 07:51 AM IST

உங்கள் வாழ்க்கைப் பாதையில் மாற்றத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கான வாய்ப்பு உங்கள் கை வந்து சேரும். கருத்துகள் மற்றும் புதிய யோசனைகளுக்கு எப்போதும் உங்கள் மனக்கதவை திறந்து வைத்திருங்கள்.

 Gemini Daily Horoscope Today, May 3,2024: Gemini, today presents a unique opportunity for growth and exploration.
Gemini Daily Horoscope Today, May 3,2024: Gemini, today presents a unique opportunity for growth and exploration.

மிதுனம் தொழில் ஜாதகம் இன்று:

பணியிடத்தில், இன்று படைப்பாற்றல் மற்றும் தகவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பார்வையை கொஞ்சம் விசாலமாக மாற்றுங்கள். திட்டங்கள் அல்லது சிக்கலைத் தீர்ப்பதில், சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பது உங்கள் தொழில்முறை உறவுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், புதுமையான தீர்வுகளுக்கும் வழிவகுக்கும். 

உங்கள் வாழ்க்கைப் பாதையில் மாற்றத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கான வாய்ப்பு உங்கள் கை வந்து சேரும். கருத்துகள் மற்றும் புதிய யோசனைகளுக்கு எப்போதும் உங்கள் மனக்கதவை திறந்து வைத்திருங்கள். 

மிதுன ராசிக்காரர்களின் ராசிபலன் இன்று:

பொருளாதார ரீதியாக, இன்றைய நாள் எச்சரிக்கையான நம்பிக்கையின் நாளாக இருக்கிறது. ஆதாயங்களுக்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அவை விரைவான வெற்றிகளைக் காட்டிலும், நீண்ட கால முதலீடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. 

எதிர்கால இலக்குகளுடன் ஒத்துப்போகும், உங்கள் நிதிகளுக்கான புதிய வழிகளை ஆராய்வதைக் கவனியுங்கள். ஒரு நிதி ஆலோசகருடனான உரையாடல், நுண்ணறிவாக செயல்பட வழி வகுக்கும். 

குறிப்பிடத்தக்க சில நிதி நகர்வுகளை கருத்தில் கொண்டு செயல்படும் பட்சத்தில், அது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் உறுதியான அடித்தளத்தை அமைக்கும்.

மிதுனம் ஆரோக்கிய ராசிபலன் இன்று:

இன்றைய ஆற்றல், உங்கள் உடல் நலனை கவனித்துக்கொள்வதற்கான உந்துதலை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி அல்லது ஆரோக்கிய நடைமுறைகளின் புதிய வடிவங்களை ஆராய்வது பலனளிக்கும். 

யோகா, நடனம் அல்லது தற்காப்புக் கலைகள் போன்ற உங்கள் மனதை கவரும் செயல்பாடுகளைக் கவனியுங்கள். இது உங்கள் வழக்கமான விதிமுறைகளிலிருந்து, புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை அளிக்கும். 

உங்கள் உடலைக் கேட்பது முக்கியம்; உங்கள் வரம்புகளைத் தாண்டி முயற்சி செய்ய வேண்டாம். இன்று உங்கள் உணவில் அதிக சத்தான உணவுகளைச் சேர்ப்பது, உங்கள் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களையும் மனநிலையையும் மேம்படுத்தும். 

மிதுன ராசி பலம்

 • பலம்: நுண்ணறிவு, புத்திசாலி, இனிமை, விரைவு புத்திசாலி, அழகான
 •  பலவீனம்: வதந்தி, சோம்பேறித்தனம்
 •  சின்னம்: இரட்டையர்கள்
 •  உறுப்பு: காற்று
 •  உடல் பகுதி: கைகள் மற்றும் நுரையீரல்
 •  ராசி ஆட்சியாளர்: புதன்
 •  அதிர்ஷ்ட நாள்: புதன்
 •  அதிர்ஷ்ட நிறம்: சில்வர்
 •  அதிர்ஷ்ட எண்: 7
 •  அதிர்ஷ்ட கல்: மரகதம்

 

மிதுனம் ராசி பொருந்தக்கூடிய விளக்கப்படம்

 •  இயற்கை நாட்டம்: மேஷம், சிம்மம், துலாம், கும்பம்
 •  நல்ல இணக்கம்: மிதுனம், தனுசு
 •  நியாயமான இணக்கம்: ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம்
 •  குறைந்த இணக்கத்தன்மை: கன்னி, மீனம்

 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

மூலம்: Dr. J. N. Pandey

வேத ஜோதிடம் & வாஸ்து நிபுணர்

மின்னஞ்சல்:

தொலைபேசி: 9811107060 (WhatsApp மட்டும்)

WhatsApp channel

டாபிக்ஸ்