தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gemini Daily Horoscope: ‘டின்னர்ல கல்யாணத்த பத்தி பேசுங்க ஆனா..’ - மிதுன ராசிக்கு இன்றைய நாள் எப்படி?

Gemini Daily Horoscope: ‘டின்னர்ல கல்யாணத்த பத்தி பேசுங்க ஆனா..’ - மிதுன ராசிக்கு இன்றைய நாள் எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
May 18, 2024 08:00 AM IST

Gemini Daily Horoscope: இந்த வார இறுதியில் நீங்கள் ஒரு விடுமுறையைத் திட்டமிடலாம். அங்கு சென்று வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். - மிதுன ராசிக்கு இன்றைய நாள் எப்படி?

 Gemini Daily Horoscope Today, May 18, 2024: Today is good to enjoy the happy moments of love.
Gemini Daily Horoscope Today, May 18, 2024: Today is good to enjoy the happy moments of love.

மிதுனம் காதல் ஜாதகம் இன்று

காதலின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க இன்றைய நாள் சிறந்ததாக இருக்கும். நீங்கள் ஒரு உறவில் புதியவராக இருக்கும்போது, ஆச்சரியங்களைக் கொடுப்பது முக்கியம். காதலில் இருப்பவர்கள், இரவு உணவின் போது, திருமணத்தைப் பற்றி விவாதிக்க அது சிறந்த தருணமாக இருக்கும். 

இந்த வார இறுதியில் நீங்கள் ஒரு விடுமுறையைத் திட்டமிடலாம். அங்கு சென்று வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். திருமணமாகாதவர்கள் நாளின் முதல் பாதியில், தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம். அதற்கான பதில் நேர்மறையாக இருக்கும்.

மிதுனம் தொழில் ஜாதகம் இன்று

அலுவலகத்தில் சிறந்த முடிவுகளை கொடுங்கள். புதிய பொறுப்புகள், உங்களை தொழில் ரீதியாக பலப்படுத்தும். கூட்டங்களில் புதுமையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அளிக்க தயாராக இருங்கள். உங்கள் நிர்வாகம் உங்கள் அர்ப்பணிப்பை கவனித்து விரைவில் உங்களுக்கு வெகுமதி அளிக்கும். 

வதந்திகளிலிருந்து விலகி இருங்கள். இன்று உங்கள் உற்பத்தித்திறன் சமரசம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், விருந்தோம்பல், கல்வி, போக்குவரத்து ஆகியவற்றைக் கையாளும் வணிகர்கள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். 

பண ஜாதகம் இன்று

நாளின் முதல் பகுதி செல்வத்தின் அடிப்படையில், பெரிதாக உற்பத்தி செய்யாமல் இருக்கலாம். இருப்பினும், காலம் செல்ல செல்ல விஷயங்கள் மேம்படும். நீங்கள் இன்று ஒரு சொத்தை விற்கலாம் அல்லது ஒன்றை வாங்கலாம். 

இரண்டாம் பாதியில், ஒரு ஏழை நண்பருக்கு பொருளாதார ரீதியாக உதவுவது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்காமல், அதற்கு பதிலாக பங்குச் சந்தை உட்பட ஸ்மார்ட் முதலீடுகளுக்கு செல்லுங்கள். வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் பணத் தகராறுகளைத் தவிர்க்கவும்.

ஆரோக்கிய ஜாதகம் இன்று

எந்த பெரிய மருத்துவ பிரச்சினையும் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாது. இருப்பினும், சில பெண்களுக்கு மகளிருக்கே உரித்தான மருத்துவ பிரச்சினைகள் உருவாகலாம். 

நீரிழிவு நோய் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள், தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் க்ரீம் நிறைந்த உணவை தவிர்த்து, அதற்கு பதிலாக அதிக காய்கறிகள் மற்றும் சாலட்களை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். இன்று கிரகங்கள் சாகசங்களை விரும்பாததால், சாகச பயணங்களை இன்று தவிர்க்க வேண்டும்.

மிதுன ராசி பண்புகள்

 • பலம்: நுண்ணறிவு, புத்திசாலித்தன்மை
 • பலவீனம்: சீரற்றத்தன்மை, வதந்தி, சோம்பேறித்தனம்
 • சின்னம்: இரட்டையர்கள்
 • உறுப்பு: காற்று
 • உடல் பகுதி: கைகள் மற்றும் நுரையீரல்
 • ராசி ஆட்சியாளர்: புதன்
 • அதிர்ஷ்ட நாள்: புதன் 
 • நிறம்: வெள்ளி
 • அதிர்ஷ்ட எண்: 7
 • அதிர்ஷ்ட கல்: மரகதம்

 

மிதுனம் ராசி பொருந்தக்கூடிய விளக்கப்படம்

 • இயற்கை நாட்டம்: மேஷம், சிம்மம், துலாம், கும்பம்
 • நல்ல இணக்கம்: மிதுனம், தனுசு
 • நியாயமான இணக்கத்தன்மை: ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம்
 • குறைந்த இணக்கத்தன்மை: கன்னி, மீனம்

மூலம்: Dr. J. N. Pandey

Vedic Astrology & Vastu Expert

மின்னஞ்சல்: 

தொலைபேசி: 9811107060 (WhatsApp மட்டும்)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்