தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gajalakshmi Yoga: குருவோடு ஏறும் சுக்கிரன்.. உருவாகும் கஜலட்சுமி யோகம்.. குஜாலாக இருக்கப்போகும் 3 ராசிகள்

Gajalakshmi Yoga: குருவோடு ஏறும் சுக்கிரன்.. உருவாகும் கஜலட்சுமி யோகம்.. குஜாலாக இருக்கப்போகும் 3 ராசிகள்

May 10, 2024 05:33 PM IST Marimuthu M
May 10, 2024 05:33 PM , IST

  • Gajalakshmi Yoga:குருவோடு சுக்கிரன் சேர்வதால் உண்டாகும் கஜலட்சுமி யோகமும் அதனால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் குறித்தும் அறிவோம். இதன்மூலம் நிறைய ராசிகள் பொருளாதாரத் தடைகள் நீங்கி, செல்வ வளம் பெறுவது உறுதி ஆகும்.

Gajalakshmi Yoga: குருவோடு ஏறும் சுக்கிரன்.. உருவாகும் கஜலட்சுமி யோகம்.. குஜாலாக இருக்கப்போகும் 3 ராசிகள்: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.மே 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும்.

(1 / 6)

அதன்படி, கடந்த மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு சென்றார். அதேபோல், சுக்கிரனும் வரக்கூடிய மே 19ஆம் தேதி ரிஷப ராசிக்குச் செல்கிறார். அங்கு குரு மற்றும் சுக்கிரனின் இணைவின் காரணமாக கஜலட்சுமி யோகம் உண்டாகிறது. இந்த கஜலட்சுமி யோகத்தால் சில ராசியினருக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.எப்படியென்றால், குரு பகவான், அறிவு மற்றும் முன்னேற்றம், உறுதியை அளிக்கும் வல்லமை கொண்டவர். அதேபோல், சுக்கிர பகவான், காதல், சந்தோஷம் மற்றும் அழகு ஆகியவற்றை அவை செல்லும் ராசியினருக்குத் தருகிறது. இதனால் இந்த குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை அடிப்படையில் பல நன்மைகளைத் தருகிறது.இப்படி குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் கஜலட்சுமி யோகம் தரும் ராசிகள்:

(2 / 6)

மேஷம்: மேஷ ராசியினருக்கு குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உண்டாகும் கஜலட்சுமி யோகத்தால், வாழ்வில் நல்ல நிலைமையை எட்டுவர். இந்த காலகட்டத்தில்  நிலுவையில் இருந்த பணிகள் முடியும். இக்கால கட்டத்தில் தொழில்முனைவோருக்கு வருவாய் அதிகரிக்கும். போட்டிகள் குறையும். மேஷ ராசியினர், தங்கள் துறைகளில் முன்னேற நல்ல வாய்ப்பு அமையும். அதைப் பயன்படுத்திக்கொண்டால் ஏற்றம் தான். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரித்து முதலாளியின் ஆதரவைப் பெறுவீர்கள். மேஷ ராசியினரின் குடும்பத்தில் நல்ல விஷேசங்கள் நடக்கும்

(3 / 6)

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு, குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உண்டாகும் கஜலட்சுமி யோகத்தால், திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். அந்நியோன்யம் கூடும். கடன்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்கு, வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிட்டி, கடனை அடைப்பர். சிம்ம ராசியினருக்கு, கஜலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால், பொருளாதாரச் சிக்கலில் இனி சிக்கமாட்டார்கள். உடலில் இருந்த தேகப் பிரச்னைகள் சரியாகும். 

(4 / 6)

மகரம்: மகர ராசியினருக்கு, குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உண்டாகும் கஜலட்சுமி யோகத்தால், பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் சொல் இனிமையாகும். பணியில் இருப்பவர், தன் துறையில் முன்னேறுவர். உங்களிடம் கடன் பெற்று, திரும்பத் தராமல் இழுத்தடிக்கும் மகர ராசியினர், அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. உடல் நலம் மேம்படும். வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்வுகள் வரும். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்