தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gajakesari Yoga: ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகம்.. யானையைப் போன்ற வலுவுடன் நிற்கப்போகும் ராசிகள்!

Gajakesari Yoga: ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகம்.. யானையைப் போன்ற வலுவுடன் நிற்கப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
May 06, 2024 08:18 PM IST

Gajakesari Yoga: ரிஷப ராசியில் உண்டாகும் கஜகேசரி யோகத்தால் வருமானமும் சமூகத்தில் அந்தஸ்தும் பெறும் மூன்று ராசிகள் குறித்துக் காண்போம்.

சந்திரன்
சந்திரன்

மே 8, 2024 என்பது மிகவும் புனிதமான நாள். இந்த நாளில் ரிஷப ராசியில் ‘’கஜகேசரி யோகம்'' உருவாகி வருகிறது. கஜகேசரி யோகம் மிகவும் சக்தி வாய்ந்த யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தை உருவாக்குவதன் மூலம், ஒரு மனிதன் யானையைப் போன்ற வலிமையைப் பெறுகிறான். இதன் மூலம் தனிநபர் ஒருவர் அதிகாரத்தையும் செல்வத்தையும் பெறுகிறார்.

மே 8, 2024அன்று ரிஷப ராசியில் சந்திரன் வந்தவுடன், ரிஷப ராசியில் கஜகேசரி யோகம் உண்டாகும். கஜகேசரி யோகம் உருவாவதன் மூலம், தனிநபர் ஒருவர் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறும் வாய்ப்புண்டாகும். அப்படி கஜகேசரி யோகத்தால் முன்னேறும் ராசிகள் குறித்துக் காண்போம். 

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ராசியில் கஜகேசரி யோகம் உருவாவதால் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பார்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் உயரங்களைத் தொட முடியும். உங்கள் தொழிலும் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் புரிதலின் அடிப்படையில் வாழ்க்கையில் மிகவும் கடினமான முடிவுகளை சிறந்த முறையில் எடுப்பீர்கள். உங்கள் சிந்திக்கும் திறன் உங்களை நல்ல நிலைமைக்கு அழைத்துச் செல்லும். ரிஷப ராசியினருக்கு தனித்தன்மை இருப்பதால், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வர்.

மிதுனம்: கஜகேசரி யோகம் என்பது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வரப்போகும் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற வாய்ப்புக் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். புரோமோஷன் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள், இறைதொண்டுகளைச் செய்ய பணம் செலவழிப்பீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், விரைவில் திருமணத்திற்கு வரன் கிடைக்கும். குழந்தையில்லாதவர்களாக இருந்தால் இக்கால கட்டத்தில் கரு தங்கும். வாழ்வு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும். மிதுன ராசிக்காரர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

சிம்மம்: கஜகேசரி யோகம் உருவாவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாகும். உங்கள் பணியை உங்கள் சீனியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டுவார்கள். ஒவ்வொரு பாதச்சுவடிலும், ஒவ்வொரு அடியிலும் வெற்றி உங்களைப் பின்தொடரும். சம்பளம் அதிகரிக்கலாம். முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிம்ம ராசியினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கையான காலம் இதுவாகும். இக்காலகட்டத்தில் வீட்டு மனை வாங்கவும், வீடு கட்டவும் வாய்ப்புகள் உருவாகும். உங்களது நிதானமான முயற்சியால், எதிரிகள் நிலைகுலைந்து போவர். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்