Rama Navami: ராம நவமி முதல் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து தப்பிக்கப்போகும் ராசிகள்
Rama Navami: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஸ்ரீ ராமர் கடக ராசியில் பிறந்தார். 2024ஆம் ஆண்டில், ராம நவமியானது, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ராம நவமி பல ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்களைக் கொடுக்கிறது.

Rama Navami:வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக, பல ராசிகளின் மக்கள் பயனடையலாம். ராம நவமி ஏப்ரல் 17ஆம் தேதி வருகிறது, இந்த புனித நாளில் பல மங்களகரமான முகூர்த்தங்கள் வருகின்றன. கஜகேசரி யோகாம், ராம நவமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிக்காரர்கள் இதனால் பயனடைகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 18, 2025 05:00 AMToday Rasipalan : 'சவாலை சந்தியுங்கள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்.. கவனம் முக்கியம்' பிப்.18 இன்றைய ராசிபலன் இதோ!
Feb 17, 2025 01:56 PMSukra Bhagavan: கொட்டி கொடுக்கும் சுக்கிரன் பகவான்.. மார்ச் மாதம் முதல் எந்த மூன்று ராசிக்கு யோகம் கிடைக்கும்?
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
ஜோதிடத்தின் படி, ஸ்ரீ ராமர் கடக ராசியில் பிறந்தார். ராம நவமி 2024ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில், சூரியன் பத்தாவது ராசியில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார். இதனால், ராம நவமியில், பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கயிருக்கிறது. ராம நவமியில் எந்தெந்த ராசியினர் பயன் அடைவார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.
மேஷம்: நீண்ட நாட்களாக பொருளாதாரச் சிக்கலில் இருந்தவர்கள் நன்மை அடைவார்கள். ராம நவமி தினத்தில், மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பயனடைவார்கள். கடன் வாங்கி, பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மேஷ ராசியினருக்கு இந்த ராம நவமி நாளில் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும், குடும்பப் பிரச்னைகள் தீரும். தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடையே இருந்துவந்த பிரச்னைகள் தீரும்.
கடகம்: இந்த ராசிக்காரர்கள் ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்துடன் சிறப்பு கருணையைப் பெறுவார்கள். ஏனெனில், ஸ்ரீராமரும் கடக ராசியில் பிறந்தவர். இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்கள் பல்வேறு மங்களகரமான யோகங்கள் மூலம் பயனடைவார்கள். இதனால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடக ராசியினர், பொறுமையுடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டீர்கள் என்றால் தொழிலில் வெல்வீர்கள்.
துலாம்: நீங்கள் நிலம் மற்றும் வீடு வாங்க நினைத்தால், அந்த கனவு விரைவில் நனவாகும். நிதியைப் பெருக்க அதிகரிக்க இது மிகவும் நல்ல நேரம். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். உங்கள் தொழில் பெரிதும் மேம்படும். வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்காத துலாம் ராசியினர், சேமிப்புக் கணக்கினைத் தொடங்கி பணத்தைப் போடுவீர்கள்.
மகரம்: இந்த நேரத்தில் நீங்கள் அன்புக்குரியவரை சந்திப்பீர்கள். உங்கள் தொழிலை மேம்படுத்த புதிய வழிகளைக் காண்பீர்கள். அரிய பரிசினைப் பெறலாம். சுற்றத்தார் இடையே உங்களின் மரியாதை கிடைக்கும். செல்வம் பெருகும். அறப் பணிகளில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்கும் மகர ராசியினருக்கு நீங்கள் எதிர்பார்த்த நல்ல வரன் அமையும்.
மீனம்: உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். எல்லா பக்கங்களிலிருந்தும் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். முதலீடு செய்ய இது நல்ல நேரம். உங்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, இத்தனை நாட்களாக தராமல் ஏமாற்றிய நபர்கள், மனம் திருந்தி திருப்பித் தந்துவிடுவார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்