Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை! திக்பலம் பெற்ற கிரகங்கள் தரும் நன்மைகள்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை! திக்பலம் பெற்ற கிரகங்கள் தரும் நன்மைகள்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!

Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை! திக்பலம் பெற்ற கிரகங்கள் தரும் நன்மைகள்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!

Kathiravan V HT Tamil
Published Jul 24, 2024 07:00 AM IST

ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய வரிசைகளில் திக்பலம் பெற்ற கிரகங்களும் நிறைய நிலைகளில் வாழ்வியல் முன்னேற்றங்களை கட்டாயம் தரக்கூடிய தன்மைகளை கொண்டு உள்ளது.

Rasipalan, மேஷம், மீனம், திக்பலம்,கிரகங்கள்,  நன்மைகள், அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!
Rasipalan, மேஷம், மீனம், திக்பலம்,கிரகங்கள், நன்மைகள், அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!

இது போன்ற போட்டோக்கள்

திக்பலம் அடையும் நிலை 

ஒவ்வொரு வீடுகளிலும் சில கிரகங்கள் அதிக வலிமையை பெறும். திக்பலத்தில் திக்கு என்பது திசையை குறைக்கும். ஜோதிடத்தில் லக்னம் என்பது கிழக்கு திசையை குறிக்கும். 

லக்னத்தில் சில கிரகங்களும், 4ஆம் இடம் என்று சொல்லக்கூடிய வீட்டில் சில கிரகங்களும், 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளதாக கணிக்கப்படுகின்றது. கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10ஆம் இடங்களில் சப்த கிரகங்கள் திக்பலம் அடைகின்றன. 

லக்னத்தில் குரு, புதன் பகவான் திக்பலம் பெறுவார்கள். 

4ஆம் எனப்படும் சுக ஸ்தானத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகியோர் திக்பலம் பெறுவார்கள். சந்திரனும், சுக்கிரனும் தாய், தாரத்தை குறிக்கும் கிரகங்களாக உள்ளனர். பிறந்த மனிதன் தாயிடமும், திருமணத்திற்கு பிறகு தாரத்திடமும் அன்பை பெறுவார்கள். 

7ஆம் இடத்தில் பாவக்கோள்கள் அதிகமாக திக்பலம் பெறுகிறது. இதில் சனி பகவான் அதிக வலிமையை தரக்கூடியவராக உள்ளார். 7ஆம் இடம் என்பது சமுதாயம், உழைப்பு, உழைப்பால் கிடைக்கும் மேன்மை உள்ளிட்டவற்றை குறிக்கின்றது. 

10ஆம் வீட்டில் திக்பலம் பெறும் கிரகமாக சூரியனும், செவ்வாயும் உள்ளனர். 

ராகு, கேதுகளுக்கு திக்பலம் இல்லை என்றாலும், 7ஆம் இடத்தில் அமரும் போது அதிக வலிமை பெறுகின்றனர்.  இந்த அமைப்பு மூலம் பொருளாதார ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தாது. திக்பலம் பெற்ற கிரகத்தின் தசை நடக்கும் போது, வாழ்கையில் திருப்பம் ஏற்படுத்தி தரும். 

லக்னத்தில் திக்பலம் 

லக்னத்தில் திக்பலம் பெற்ற குரு, புதன் ஆகியோர் தசைகள் நடக்கும் போது அதிபுத்திசாலித்தனம் உண்டாகும். புத்தர பாக்கியம், படிப்பு, புத்திசாலிதனம் மூலம் வாழ்வியல் திருப்பங்கள் ஏற்படும். புதிய யோசனைகள் மூலம் வாழ்வியல் முன்னேற்றங்கள் ஏற்படும். 

சுக்கிரன், சந்திரன் தசைகள்

4ஆம் இடத்தில் அமர்ந்தபடி சுக்கிரன், சந்திரன் தசை நடந்தால், சொத்துக்கள், சுகம், கல்வி, மேன்மை, வாகனம், வீடு, வாசல், வசதி வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்கை மூலம் மகிழ்ச்சியை உண்டாக்குவது போன்ற நன்மைகள் இதனால் ஏற்படும். 

சனி பகவான்

7ஆம் இடத்தில் திக் பலம் பெறும் சனி பகவான் உழைப்பின் மூலம் நன்மைகளை பெற்று தருவார். கூட்டு தொழிலில் லாபம், சமூதாயத்திற்கு நன்மை தரும் தொழில்களில் வெற்றி, வேலைக்காரர்கள் மூலம் ஆதாயம் ஆகிய நன்மைகள் கிடைக்கும். 

10ஆம் இடத்தில் திக் பலம் 

10ஆம் இடத்தில் திக் பலம் பெற்று இருக்க கூடிய சூரியன், செவ்வாய் கிரகங்கள் அதிகாரம், பதவி, முன்னேற்றம், தகப்பனால் தொழில்முறை யோகம் உள்ளிட்ட நன்மைகள் உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.