துலாம் முதல் மீனம் வரை! குரு வக்ர நிவர்த்தி பலன்கள்! எதிர்பாரா அதிஷ்டம் யாருக்கு?
நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். கடந்த அக்டோபர் 9, 2024 முதல் 4 பிப்ரவரி 2025 வரை 119 நாட்கள் வக்ர நிலை எனும் பின்னோக்கி நகர தொடங்க உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சி துலாம் முதல் மீனம் ராசிகளுக்கு அளிக்க கூடிய பலன்களை இங்கு காண்போம்.

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். கடந்த அக்டோபர் 9, 2024 முதல் 4 பிப்ரவரி 2025 வரை 119 நாட்கள் வக்ர நிலை எனும் பின்னோக்கி நகர தொடங்க உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சி துலாம் முதல் மீனம் ராசிகளுக்கு அளிக்க கூடிய பலன்களை இங்கு காண்போம்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
துலாம்
இந்த குரு வக்ர நிவர்த்தியால் பெரும் வெற்றிகளை பெறப் போகும் ராசியாக துலாம் ராசி உள்ளது. தொல்லை கொடுத்த எதிரிகள் அழியப் போகின்றனர். மிகவும் நல்ல நேரமாக இந்த நேரம் இருக்கப் போகிறது . அதீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. எதிர்பாரா பொருளாதார நிலை உயரப் போகிறது. குடும்பத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறது. அஷ்டமி அன்று குருவிற்கு வழிபாடு செய்ய வேண்டும்.
விருச்சிகம்
குரு 7 ஆம் இடத்தில் வக்ரம் அடையப் போகும் விருச்சிக ராசிக் காரர்களுக்கு திருமண யோகம் கூடி வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொழில்கள் தொடங்கும் நேரம் இதுவாகும். நிறைந்த மன நிம்மதி கிடைக்கும். மேன்மையான நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. கடன் திருப்பி கொடுக்க முடியாத நிலை உருவாகும். குருக்களுக்கு பாடக பூஜை செய்ய வேண்டும்.
தனுசு
ஆறாம் இடத்தில் குரு வக்ரம் அடைவதால் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் வாய்ப்பு உருவாகப் போகிறது. வெற்றி மேல் வெற்றி வரும் யோகமும் வரப் போகிறது. பிரிந்த தம்பதியினர் சேருவார்கள். குரு வக்ரம் அடையவில்லை எனில் பகை உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை வர வாய்ப்பும் உண்டு. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். தன்வந்திரி வழிபாடு செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசிக் காரர்களின் அவர்களது ராசியலேயே குரு வக்ரம் அடைவதால் திருமண யோகம், புத்திர பாக்கியம் என அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கப் போகிறது. அனைத்து கவலைகளும் தீரும் காலமாக இருக்கப் போகிறது. குல தெய்வ வழிபாடு சிறந்த நன்மைகளை அளிக்கும்.
கும்பம்
கும்ப ராசிகளுக்கு ஜாதகத்தில் சனி அல்லது குரு வக்ரம் அடைந்தால் பொன்னான நேரம் வரப் போக்கிறது. அனைத்து நோய்களும் நிவர்த்தி பெறும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். புதியதாக வீடு வாங்க முடியும். திட்டங்கள் வெற்றி பெறும்.
மீனம்
மீனம் ராசிக் காரர்களுக்கு 3 ஆம் இடத்தில் குரு வக்ரம் அடைவதால் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் வரும். லாபம் இரட்டிப்பாக வரப் போகிறது. மன வலிமை அதிகமாகும். அனைத்து தொழில் துறையிலும் முன்னேற்றம் அடையப் போகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்