தமிழ் செய்திகள்  /  Astrology  /  From Bringing Postive Energy Know About Some Auspicious Effects Of Aloe Vera, Check What Vastu Experts Says

AloeVera Vastu Tips: நேர்மறை ஆற்றலுடன், பணத்தை கொட்டி கொடுக்கும் கற்றாழை பரிகாரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 20, 2024 08:40 AM IST

லாபத்தை கொட்டி கொடுக்கும் வல்லமை கொண்ட கற்றாழை, குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளையும் தீர்த்து நேர்மறை ஆற்றை தருகிறது. கற்றாழை பரிகாரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

கற்றாழையின் வாஸ்து நன்மைகள்
கற்றாழையின் வாஸ்து நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கற்றாழை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொருளாதார பிரச்னைகள் இருப்பவர்களுக்கு நன்மை தரும் செடியாக கற்றாழை இருக்கிறது. வீட்டின் பால்கனி அல்லது தோட்டத்தில் கற்றாழை வைத்தால் லாபம் கொட்டோ கொட்டு என கொட்டும் என கூறும் வாஸ்து நிபுணர்கள், கடின உழைப்பை வெளிப்படுத்துவோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறார்கள்

அதே போல் காதல் உறவில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதை தடுக்க வீட்டில் கற்றாழை செடி வளர்த்தால் உரிய பலனை பெறலாம். திருமண உறவை வலுப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வீட்டில் எப்போதும் பரபரப்பும், சச்சரவுகளும் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். உங்களது வீட்டில் கற்றாழை செடியை வைத்தால் நேர்மறையான ஆற்றல் தானாக குடும்பத்தினரிடம் வந்த சேரும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

வாஸ்துபடி வீட்டின் மேற்கு பகுதியில் கற்றாழையை வைத்தால் நல்ல பலனை பெறலாம். கிழக்கு, வடகிழக்கு திசையில் வளர்த்து வர மன அமைதியை அதிகரிக்கும். வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை வளர்த்தால் வேலையில் முன்னேற்றமும் பதவி உயர்வும், பண வருமானமும் அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்கள்.

வடமேற்கு பகுதியில் கற்றாழை செடியை தப்பி தவறி கூட வைக்க கூடாது. இதனால் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும், மாறாக பல்வேறு புதிய பரச்னைகளால் அவதிப்பட நேரிடும் எனவும் கூறப்படுகிறது

பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். வீட்டு வாசல், பால்கனி எங்கு வேண்டுமானாலும் கற்றாழையை தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

பரிகாரத்துக்காக வளர்க்கும் கற்றாழை செடியை வெட்டக்கூடாது. கற்றாழை செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது குல தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டும். வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்து சிறிதளவு சோம்பு, சர்க்கரை, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

மறுநாளில் குளித்து விட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் அந்த தண்ணீரை கொண்டு போய் கற்றாழை செடிக்கு ஊற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக பணவரவானது அதிகரிக்கும். அதேபோல் கடனாக கொடுத்த பணமும் வந்து சேரும் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்