Somvati Amavasai Four Lucky Signs: சோம்வதி அமாவாசையினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் நான்கு ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Somvati Amavasai Four Lucky Signs: சோம்வதி அமாவாசையினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் நான்கு ராசிகள்!

Somvati Amavasai Four Lucky Signs: சோம்வதி அமாவாசையினால் அதிர்ஷ்டம் பெறப்போகும் நான்கு ராசிகள்!

Marimuthu M HT Tamil Published Apr 06, 2024 10:19 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 06, 2024 10:19 PM IST

Somvati Amavasai Four Lucky Signs: சோம்வதி அமாவாசை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>சோம்வதி அமாவாசை&nbsp;</p>
<p>சோம்வதி அமாவாசை&nbsp;</p>

இது போன்ற போட்டோக்கள்

இந்து மதத்தில் ஒவ்வொரு ஆண்டும், சோம்வதி அமாவாசை, சைத்ர அமாவாசை நாளில் வருகிறது. இந்த அமாவாசை திங்கட்கிழமையில்(ஏப்ரல் 08) வருவதால் இதற்கு ‘’சோம்வதி அமாவாசை'' என்று பெயர். இந்த சிறப்பு நாளில், சூரிய கிரகணமும் வருகிறது. விசித்திரமான இந்த சிறப்பம்சம் என்னவென்றால், இந்த காலகட்டத்தில், பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அதிகாலை 3:11 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. அதன்பின், அமாவாசை இரவு 11:50 மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் அதிகாலை 2.22 மணிக்கு முடிவடையும்.

இந்த அமாவாசையில் சூரிய கிரகணம் இருப்பதால், பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தை பார்க்கப் போகிறார்கள். எந்தெந்த ராசியினருக்கு, சூரிய கிரகணம் மற்றும் சோம்வதி அமாவாசையினால் நன்மை கிடைக்கப்போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.  

ரிஷபம்: சோம்வதி அமாவாசையை முன்னிட்டு, ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. இத்தனை நாட்களாக மந்தமாக இருந்த உங்கள் தொழிலில் சாதகமான அனுபவம் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இறக்குமதி அதிகரிக்கும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். எதிரிகள் தொல்லை குறையும். பழம் போன்ற இளகிய மனத்தைப் பெறுவீர்கள். வெற்றி பெறுவது உறுதி.

கன்னி: சோம்வதி அமாவாசை அன்று கன்னி ராசியினருக்கு நல்ல யோகம் வாய்க்கும். பல ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கல்யாணம் கைகூடாத கன்னி ராசியினருக்கு கல்யாணம் கை கூடும். காதல் உறவு நன்றாக இருக்கும். செல்வம் வந்து கொண்டே இருக்கும். அதில் தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை. தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம்: சோம்வதி அமாவாசையினால் துலாம் ராசியினருக்கு வியாபாரம் பெருகும். செல்வ முன்னேற்றத்திற்கான பாதை விசாலமாகும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த பணிகள் சட்டென முடிவடையும். முன்னோர்களிடமிருந்து சில சொத்துகள் கிடைக்கும். உங்கள் குழந்தைக்கு சில நல்ல மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.

கும்பம்: சோம்வதி அமாவாசையினால், ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் வருவதற்கான பாதை அகலம் ஆகும். ஆரோக்கியப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்