தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Four Zodiac Signs: மீன ராசியில் 4 கிரக சேர்க்கை.. லாபம் ஈட்டப்போகும் நான்கு ராசிகள்!

Four Zodiac Signs: மீன ராசியில் 4 கிரக சேர்க்கை.. லாபம் ஈட்டப்போகும் நான்கு ராசிகள்!

Marimuthu M HT Tamil
Apr 16, 2024 05:02 PM IST

Four Zodiac Signs: மீன ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்றுசேர்வதால திடீர் யோகங்கள் உண்டாகின்றன.

மீன ராசி
மீன ராசி

அதன்படி, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் செவ்வாய் கிரகம், ஏப்ரல் 23ஆம் தேதி, மீன ராசியில் பயணிக்கத் தொடங்குகிறார். முன்பே, மீன ராசியில் ராகு, புதன், சுக்கிரன் வாசம் செய்கின்றனர். இந்த காலகட்டத்தில் செவ்வாயும் கூட்டு சேர்வதால் நான்கு கிரகங்கள் மீன ராசியில் சேர்ந்து, ‘சதுர்கிரக யோகத்தை’ உண்டு செய்கின்றன. இந்த சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெருமளவு சம்பாதிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கடகம்: இந்த ராசியின் 9ஆம் இல்லத்தில், நான்கு கிரகசேர்க்கையால் இந்த சதுர்கிரக யோகம் உண்டாகியுள்ளது. இந்த யோகத்தால், பூர்வீகமான ஊரிலோ மனை வாங்கவோ, பூர்வீக ஊரில் வீடு வாங்கவோ, ஒரு வேளை பூர்வீகச் சொத்துகளோ கிடைக்கும். வெகுநாட்களாக வெளிநாடு போய், சம்பாதிக்கும் எண்ணம்கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் மிகச்சரியாக முயற்சி செய்தால் கண்டிப்பாக அயல்நாடு செல்லும் யோகம் கிடைக்கும். குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வரும் நபர்களின் பணியின் தரம், முதலாளிகளுக்குப் புரிந்து சம்பளத்தை உயர்த்தும் வாய்ப்புண்டு. தொழில் தொடங்கி சரியான வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் இருந்தால், இக்காலகட்டத்தில் நல்ல நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வெகுநாட்களாக எதிரிகளின் தொல்லையால் சம்பாதித்த கெட்டப்பெயர் நீங்கும். மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும்.

தனுசு: இந்த ராசியின் 4ஆவது இல்லத்தில் ‘சதுர் கிரக ஹோகம்’ உண்டாகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் அன்பினை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றவர்கள், உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள், சண்டைகள் சரியாகும். உங்கள் தொழிலில் உருவாகிய புதிய போட்டியாளர்களின் செயல்பாடுகள் பெரியளவில் எடுபடாது. அரசுப்பேருந்தில் பணிக்குச் சென்றுகொண்டிருக்கும் தனுசு ராசியினருக்கு, மோட்டார் இருசக்கரவாகனம் வாங்கும் சூழல் வாய்த்துள்ளது.

மிதுனம்: இந்த ராசியின் 10ஆம் இல்லத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக, மிதுன ராசிக்கு சில நன்மைகள் கிடைக்கவுள்ளன. இத்தனை நாட்களாக கோபம் மற்றும் தவறான வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி கெட்டப்பெயரை சம்பாதித்து இருக்கும் மிதுனராசியினருக்கு, இந்த காலகட்டத்தில் மெல்ல மெல்ல நற்பெயர் உண்டாகும். இந்த ராசியினர் பணி மற்றும் தொழிலில் வரும் சிக்கல்களை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடுவார்கள்.வேறு வேலை தேடும் மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைகிடைக்க வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்