Sani Rajayogam: ஆகஸ்ட் மாதத்தில் சனியால் டரியல் நீங்கி மகிழ்ச்சி காணும் நான்கு ராசிகள்
Sani Rajayogam: ஆகஸ்ட் மாதத்தில், சனி பகவான் சில ராசிகளுக்கு தனது சிறப்பு கருணையைக் காட்டுவார். ஆகஸ்ட் மாதத்தில் சனியால் டரியல் நீங்கி மகிழ்ச்சி காணும் நான்கு ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
Sani Rajayogam: ஜோதிடத்தில், சனி பகவான் கிரகங்களின் நீதிபதியாக கருதப்படுகிறார். சனி பகவான் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். சனி பகவான் மார்ச் 29, 2025அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசியில் நுழைவார். ஆகஸ்ட் மாதத்தில், சனி பகவான் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
தொழில், நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் சில ராசியினருக்கு சனி பகவான் ஆகஸ்ட் மாதத்தில் நல்ல பலன்களைத் தருவார். சனி பகவானின் ராஜயோகம் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பது குறித்துப் பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்காக, சனி பகவான், ஐந்தாவது ராஜயோகத்தை சனி உருவாக்குகிறார். சனி பகவான் மேஷ ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து ராஜயோகம் செய்கிறார். மேஷ ராசியினருக்கு, ஆகஸ்ட் மாதத்தில் நிதிச் சிக்கல்கள் நீங்கும். வசதிகள் பெருகும். வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய உயரங்களை அடைவீர்கள். திருமணம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வரும் ஆகஸ்ட் 16 முதல் செல்வ மழை பொழியும்.
கடகம்:
சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, கடக ராசிக்காரர்களுக்கு, சனி எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் சனிபகவானால் கடக ராசிக்காரர்கள் ஆசீர்வதிக்கப்படுவர். வியாபாரத்தில் இத்தனை நாட்களாக இருந்த இழுபறி மறைந்து லாபம் கிடைக்கும். நீங்கள் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறலாம். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையே இருந்த தற்காலிகப் பிரிவு மறைந்து சேர்வீர்கள்.
துலாம்:
சனி பகவான், துலாம் ராசியினருக்காக ஷஷ ராஜ யோகத்தை உருவாக்குகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி சுப பலன்களைத் தருவார். வேலை தேடும் துலாம் ராசி மக்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மாத இறுதிக்குள் துலாம் ராசியினருக்கு நல்ல செய்தி வரும். வரன் பார்க்கும் துலாம் ராசியினருக்கு நல்ல தகவல் வந்து சேரும்.
கும்பம்:
சனி பகவான், தற்போது கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி. கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தற்செயல் ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகஸ்ட் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காலத்தில் உங்களிடம் பணம்பெற்று தராமல் இழுத்தடித்தவர்கள், பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இத்தனை நாட்களாக பணியிடத்தில் இருந்த பதற்றம், தொழிலில் இருந்த கடும்போட்டி ஆகியவை சற்று குறைந்து, ஆசுவாசம் கிட்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்