நான்கு யோகங்களால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.. 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நான்கு யோகங்களால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.. 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகும் ராசிகள்

நான்கு யோகங்களால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.. 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகும் ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 15, 2024 03:40 PM IST

Lucky Zodiac Signs: கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால், 2025 வருட தொடக்கத்தில் நான்கு சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால் 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகின்றன சில ராசிகள். ஜனவரி 1ஆம் தேதி முதல் ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்.

நான்கு யோகங்களால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.. 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகும் ராசிகள்
நான்கு யோகங்களால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.. 2025 புத்தாண்டில் பை நிறையா பணத்துடன் விளையாட போகும் ராசிகள்

இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி 1, 2025 அன்று ஹர்ஷனா, பலவ, கௌலவ் மற்றும் திதில யோகங்கள் உருவாகிறது. இந்த யோகங்களுடன் புத்தாண்டு தொடங்குவது அரிதானதாகவும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

எந்த யோகம் என்ன பலன் தரும்?

ஜோதிட சாஸ்திரப்படி ஹர்ஷ யோகம் உருவாகும்போது, ​மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும். இதன் விளைவாக, நீங்கள் எதிரிகளை அழிப்பீர்கள். பாவச் செயல்களில் இருந்து விலகி இருப்பீர்கள். நீங்கள் ஒரு சக்திவாய்ந்த நபருடன் நட்பு கொள்வீர்கள். அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

ஜோதிடத்தின்படி பலவ யோகம் (கரன்) பல செயல்களில் நன்மையை பெற்று தரும் என கூறப்படுகிறது. இது அக்னி வழிபாடு, வேதங்களை படிப்பது, இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் அமைதி சடங்குகளை வாசிப்பதை ஊக்குவிக்கிறது.

கௌலவ யோக கரணம் சமூகமயமாக்கல், உறவுகளை கட்டியெழுப்புதல், குழுப்பணியை வளர்ப்பது மற்றும் உயர்ந்த நிலைக்கு உயர உதவுகிறது.

திதிலா என்பது வேத ஜோதிடத்தில் தகவல்தொடர்புடன் தொடர்புடையது. இது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. இந்த நான்கு யோகங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாத தொடக்கத்தில் நான்கு சுப யோகங்கள் அமைவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்காலத்தில் நன்மை பயக்கும் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கல்வி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இது நல்ல நேரம். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும். மனக்கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படும். சுற்றுலா செல்ல வேண்டி வரும். அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக அமையும். விற்பனையில் லாபம் அடைவீர்கள்.

சிம்மம்

சுப யோகங்களின் பலனாக சிம்ம ராசிக்கு புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமையும். சொத்து, வியாபாரம் போன்றவற்றின் மூலம் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.இது வெற்றிகரமான காலம், நீங்கள் எதை விரும்பினாலும் அது நிச்சயம் நிறைவேறும். துணையால் ஆதாயம் அடைவீர்கள்.

அன்றாடப் பணிகள் நன்மை தரும். குடும்ப பிரச்னைகள் தீரும் வாய்ப்பு உண்டாகும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகஸ்தர் மகிழ்ச்சி அடைவார்கள். பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த சுப யோகங்களின் பலனாக புத்தாண்டில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்ப பிரச்னைகள் தீரும் வாய்ப்பு உண்டாகும். பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

கும்பம்

2025ஆம் ஆண்டின் தொடக்கமே சுபமாக அமையும். இந்த வருடம் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அதற்கு ஏற்ப கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். தொழில் ரீதியாக இது மிகவும் நல்ல நேரம். பழைய நண்பரை சந்திப்பீர்கள்.

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் தகவல்களும் பரிந்துரைகளும் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. இந்த துறை சார்ந்த நிபுணர் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

 

 

 

 

Whats_app_banner