தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Uthiram: முன்னேற்றத்தை தரும் குரு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு! உத்திர நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்

Guru Peyarchi 2024 Uthiram: முன்னேற்றத்தை தரும் குரு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு! உத்திர நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2024 11:50 PM IST

உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசியில் முதல் பாதத்திலும், கன்னி ராசியில் 1,2,3 பாதங்களை கொண்டதாக உள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரனருக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

உத்திரம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
உத்திரம் நட்சத்திரனருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் உத்திரம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

உத்திரம் நட்சத்திரனர் சிம்ம ராசியில் ஒன்றாம் பாதம், கன்னி ராசியில் 1,2,3 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உத்திர நட்சத்திரனர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளார்கள். சூரிய பகவானின் நட்சத்திரத்தில் தான் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

20 வயது வரை சந்திர திசையில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு நல்ல காலமாக உள்ளது. குருவின் பார்வை உங்கள லக்கினத்தில் கிடைப்பதால் வெற்றிகளும், நற்பலன்களும் நிச்சயம். புதிய முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.

38 வயது வரை இருப்பவர்களுக்கு ராகு திசை இருந்து வருகிறது. விட்டு கொடுத்து சென்றால் கணவன், மனைவி உறவில் விரிசல் இருக்காது. தொழில் விஷயத்தில் முக்கிய முடிவுகளை யோசித்து செயல்படுத்த வேண்டும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான சூழல் அமையலாம். சினிமா, அரசியலில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்

54 வயது வரை உள்ளவர்களுக்கு குரு திசையாக உள்ளது. நீங்கள் செய்த பல்வேறு நல்ல விஷயங்களுக்கு புண்ணியங்களை பெறும் காலமாக இருக்கும். பதவி, புகழை பெறுவீர்கள்.விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள்.

63 வயது வரை சனி திசையாக உள்ளது. எதிரிகளால் மறைமுக பிரச்னைகள் ஏற்படலாம். உடல்நிலையில் கவனம் தேவை. நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். வழக்குகளில் சாதகமான நிலை வரும். தொழிலில் இருந்து இடர்பாடுகள் நீங்கும்.

பொதுப்பலன்கள்

பொருளாதார ரீதியில் எந்த பிரச்னையும் இருக்காது. வருமானங்கள் எதிர்பார்த்த அளவு இருக்கும். முயற்சிகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.

உடன்பிறப்புகள், உறவினர்கள் நன்மைகள் கிடைக்கும். வீடு, இடமாற்றத்துக்கான சூழ்நிலை அமையும். சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

சோம்பேறித்தனத்தை விட்டொழித்தால் தோல்வியை தவிர்க்கலாம். கிரகங்களின் சாதகமான நிலையை பயன்படுத்தி முன்னேற்றம் பெறலாம். வேலையில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. சக ஊழியர்கள் வேண்டிய உதவிகளை செய்வார்கள். பதவி உயர் உண்டு. எதிரிகளை வீழ்த்துவீர்கள்.

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஏதாவது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். தொழில் செய்வர்களுக்கு ஓரளவு லாபத்தை பெறுவீர்கள்.

தெய்வ அனுகூலம் கிடைக்கும் ஆண்டாக குரு பெயர்ச்சி அமையும். வெளிமாநிலம், வெளிநாடு பயணங்களுக்கான வாய்ப்பு ஏற்படும். நல்லதொரு ஏற்றம் அமையும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்