Ashta Lakshmi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணத்தில் குளிக்க வைக்கும் அஷ்டலட்சுமி யோகம் யாருக்கு?
”Ashta Lakshmi Yogam: ஒருவர் ஜாதகத்தில் அஷ்ட லட்சுமி யோகம் இருந்தால், எட்டு மடங்கு பலனை பெறலாம்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் அஷ்ட லட்சுமி யோகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அஷ்ட லட்சுமி என்பது எட்டு வகை லட்சுமிகளை குறிக்கும். செல்வ செழிப்புக்கு தனலட்சுமி, விளைச்சல் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு தான்ய லட்சுமி, துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு வீரலட்சுமி, வெற்றிக்கு விஜயலட்சுமி, சக்தி பெற ஆதிலட்சுமி, கல்வி கற்க வித்யாலட்சுமி, ஊக்கம் மற்றும் மன உறுதிக்கு கஜலட்சுமி, குழந்தை செல்வத்திற்கு சந்தான லட்சுமி என எட்டு லட்சுமிகளையும் உள்ளடக்கிய யோகமாக அஷ்ட லட்சுமி யோகம் உள்ளது.
ஒருவர் ஜாதகத்தில் அஷ்ட லட்சுமி யோகம் இருந்தால், எட்டு மடங்கு பலனை பெறலாம். இந்த யோகம் பெற்றவர்களின் வீட்டில் வலம்புரிச் சங்கு இருந்தால் லட்சுமி குபேரர் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஏதெனும் ஒன்றிலும்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.
இந்த யோகத்தால் ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்.
இந்த யோகம் பெற்றவர்கள் தங்களது வாழ்கையில் பொருளாதார ரீதியாக செழிப்பாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். நல்ல விதியும், அதிர்ஷ்டமும் அவர்களை பின்தொடரும் என்பது ஜோதிடர்கள் கூற்றாக உள்ளது.
இவர்களுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல குழந்தைகளையும் சந்ததிகளையும் பெற்றிருப்பார்கள். வாழ்கையில் வெற்றி பெற தேவையான ஞானம் மற்றும் அறிவைப் பெறுவார்கள். நோய் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
டாபிக்ஸ்