Hanuman Jayanti 2024: அனுமன் ஜெயந்தியின் சிறப்புகள் - வழிபடும் முறை; உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Hanuman Jayanti 2024: அனுமன் ஜெயந்தியின் சிறப்புகள் - வழிபடும் முறை; உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

Hanuman Jayanti 2024: அனுமன் ஜெயந்தியின் சிறப்புகள் - வழிபடும் முறை; உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

Marimuthu M HT Tamil Published Apr 23, 2024 05:50 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 23, 2024 05:50 AM IST

Hanuman Jayanti 2024:இந்து சாஸ்திரங்களில் கூறியபடி, அனுமன் ஜெயந்தியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வோம்.

அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி

இது போன்ற போட்டோக்கள்

ஏப்ரல் 23 ஒரு சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் தெலுங்குபேசும் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தற்செயலாக, இந்த வருட அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 23ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை வருகிறது.

அனுமன் ஜெயந்தி ஸ்ரீ ஹனுமனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சித்ரா பவுர்ணமி நாளில் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்திற்குப் பிறகு, ஹனுமன் பிறந்தார் என்பது நம்பிக்கை. இவர் சித்திரை மாதத்தில் பிறந்தவர் என வட இந்தியாவிலும் தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களிலும் மக்கள் நம்புகின்றனர்.

அனுமன் ஜெயந்தியின் சிறப்பியல்புகள்: 2024ஆம் ஆண்டு சித்திரை நட்சத்திரம், ஏப்ரல் 23ஆம் தேதி வருகிறது. இக்காலத்தில் சித்திரை நட்சத்திரத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் விசேஷமான நற்பலன்கள் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். அதில் செவ்வாய் கிரகம், ஸ்ரீஹனுமருக்கு நன்மைகள் செய்ய அர்ப்பணிக்கப்பட்டவர். சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீஹனுமனின் பிறந்த நாளையும், ஹனுமன் ஜெயந்தியில் வஜ்ர யோகத்தையும் கொண்டாடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

சனி பகவானிடம் இருந்து நம்மை காக்கும் அனுமன்:

சனி பகவானால் பாதிப்பிற்குள்ளாகும் ராசியினர், சரியான சடங்குகளுடன் அனுமனை வணங்கினால், சனி பகவானின் பாதிப்பின் தாக்கம் சற்று குறையும். மேலும் அப்போது வன்னி மரத்துக்கு தண்ணீர் கொடுக்க மறக்காதீர்கள். சுந்தர காண்டத்தைப் படிக்கத் தவறாதீர்கள்.

அனுமன் ஜெயந்தியன்று காலையில் அரச மரத்திற்கு நீர் கொடுங்கள். கோயிலில் உள்ள ஏழைகளுக்கு உணவளித்து, எள், சர்க்கரை, கடலை தானம் செய்யுங்கள்.

ஸ்ரீஅனுமன் சனி தேவனை, ராவணனின் சிறையிலிருந்து விடுவித்தார். அதனால்தான் சனிக்கிழமையன்று, ஸ்ரீஅனுமனை வணங்குபவர்களுக்கு சனி பகவான் ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டார். மேலும் அவ்வாறு தொந்தரவு செய்யாமல் இருக்க சனி பகவான் ஸ்ரீஅனுமனுக்கு வரம் அளித்துள்ளார்.

தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் அனுமன் வழிபாடு அதிகமாகவே இருக்கிறது. தெலுங்கு மொழி பேசும் மக்கள், கெடுதல்களை தரும் காற்றில் இருந்து மக்களைக் காக்க, வாயு புத்ரனான ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.

அனைத்து செயல்களிலும் வெற்றி வாகை சூட சொல்லவேண்டிய அனுமன் மந்திரம்:

‘ஸ்ரீராம தூத மஹாதீர

ருத்ர வீர்ய ஸமத் பவ

ஆஞ்சநேய கர்ப்ப ஸ்ம்யூத

வாயு புத்திர நமோஸ்துதே’என்னும் மந்திரத்தைச் சொல்ல, காரியத்தடை நீங்கி, விஜயம் அனுகூலமாகும்.

மேலும், ’ஓம் ஆஞ்சநேய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி தந்நோ

ஹனுமன் ப்ரசோதயாத்’ என்னும் அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் பிரச்னைகள் பாதியாகக் குறையும். எனவே, தான் அனுமன் வழிபாடு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்