Fact Check: திருப்பதியில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்பட்டதா.. லட்டு விலையும் குறைப்பு என்பது உண்மையா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Fact Check: திருப்பதியில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்பட்டதா.. லட்டு விலையும் குறைப்பு என்பது உண்மையா?

Fact Check: திருப்பதியில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்பட்டதா.. லட்டு விலையும் குறைப்பு என்பது உண்மையா?

News checker HT Tamil
Jun 24, 2024 04:58 PM IST

Tirupati: திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check: திருப்பதியில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்பட்டதா.. லட்டு விலையும் குறைப்பு என்பது உண்மையா?(PTI Photo)
Fact Check: திருப்பதியில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்பட்டதா.. லட்டு விலையும் குறைப்பு என்பது உண்மையா?(PTI Photo) (PTI)

Fact: வைரலாகும் செய்தி போலியாக பரவி வருகிறது. இதனை TTD உறுதி செய்துள்ளது.

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“திருமலை தரிசன கட்டணம் ரூ300 /-200 /- ரூபாயாக குறைப்பு* *50 /- ரூபாயாக இருந்த லட்டு தற்போது* *25 /- ரூபாயாக குறைப்பு* *ஆந்திர பிரதேச அரசாங்கம்* இங்கேயும் இருக்கே ஒரு களவாணி திருட்டுக் குடும்பக் கட்சி மூதேவி. கோயிலையெல்லாம் இடிச்சித் தள்ளிக்கிட்டு. “ என்று இந்த செய்தி பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

உண்மையில் திருப்பதியில் கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதா என்று அதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் ஆய்வு செய்தோம். அப்போது, அவர்களுடைய TTD News பக்கத்தில் “NO CHANGE IN RS. 300(SED)TICKETS AND LADDU RATES- TTD URGES DEVOTEES NOT TO BELIEVE FAKE NEWS ON SOCIAL MEDIA PLATFORMS” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த விளக்கம் பதிவிடப்பட்டுள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போன்று திருப்பதி தரிசனக்கட்டணம் குறைப்பு மற்றும் லட்டு பிரசாத விலை குறைப்பு என்கிற செய்திகள் தவறானவை என்பது நமக்கு உறுதியாகிறது.

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நியூஸ்செக்கர் தமிழுக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது திருப்பதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். இந்த நகரம் முக்கியமான இந்து ஆலயமான திருமலை வெங்கடேஷ்வரா கோயில் மற்றும் பிற வரலாற்று கோயில்களுக்கு தாயகமாக உள்ளது. இது சென்னையில் இருந்து 150 கிமீ, பெங்களூரில் இருந்து 250 கிமீ, அமராவதியில் இருந்து 406 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட எட்டு ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். திருப்பதி ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் திருப்பதி (நகர்ப்புற) மண்டலம், திருப்பதி (கிராமப்புற) மண்டலம் மற்றும் திருப்பதி வருவாய் பிரிவு ஆகியவற்றின் தலைமையகமாகும்.

இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் திருப்பதியை "சிறந்த பாரம்பரிய நகரமாக" அறிவித்தது. இந்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்படும் நூறு இந்திய நகரங்களில் ஒன்றாக திருப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்