Periya Puranam: பெரிய புராணம் தெரியும்! சி.கே.சுப்பிரமணிய முதலியாரை தெரியுமா? இவர் மட்டும் இல்லை என்றால்…!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Periya Puranam: பெரிய புராணம் தெரியும்! சி.கே.சுப்பிரமணிய முதலியாரை தெரியுமா? இவர் மட்டும் இல்லை என்றால்…!

Periya Puranam: பெரிய புராணம் தெரியும்! சி.கே.சுப்பிரமணிய முதலியாரை தெரியுமா? இவர் மட்டும் இல்லை என்றால்…!

Kathiravan V HT Tamil
Published Feb 20, 2024 05:30 AM IST

”Periya Puranam: இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது”

தமிழறிஞர் சுப்பிரமணிய முதலியார்
தமிழறிஞர் சுப்பிரமணிய முதலியார்

இது போன்ற போட்டோக்கள்

சுப்பிரமணிய முதலியார் தனது தொடக்கக் கல்வியை தந்தையிடம் பயின்றார். பின்னர் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பவரிடம் சைவ சமயம் சார்ந்த சைவக்கல்வியை கற்றுத்தேர்ந்தார்.

1918ஆம் ஆண்டில் சதாசிவ செட்டியார் பெரியபுராண விரிவுரையை ஆற்றிய போடு அவருக்கு பெரிய புராணம் குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தியது.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சுப்பிரமணிய முதலியார் கோயம்புத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வழக்கறிஞராகப் பணிபுரிந்தாலும், இவர் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமய ஆய்வில் ஈடுபட்டார். மேலும் கோவை நகரசபை உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்ட அவர், இந்திய விடுதலை போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1956ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘பித்தன் ஒருவனின் சுயசரிதை’ என்ற நூலானது 2006ஆம் ஆண்டு வெளியானது.

1934ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் பெரியபுராண உரையை சுப்பிரமணிய முதலியார் எழுதினார். இவரது உரை பெரிய புராணத்தின் மையக் கருத்துகளையும், நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்திற்கு ஆறுமுகநாவலர் எழுதிய உரை முக்கியமானதாக உள்ளது. இருப்பினும், அவரது உரையானது காரைக்கால் அம்மையார் பாடலுடன் நின்றுவிட்டது.

பல தமிழறிஞர்கள் பெரியபுராணத்திற்கு உரை எழுதி இருந்தாலும் முழுமையான விரிவான பெரிய புராண உரையை சுப்ரமணிய முதலியாரே எழுதினார். தாம் எழுதிய உரைக்கு ஆதாரமாக நூலாக வா. மகாதேவ முதலியார் எழுதிய பெரியபுராண ஆராய்ச்சி நூலை எடுத்துக் கொண்டார். சுப்பிரமணிய முதலியார் பெரிய புராணத்திற்கு உரை எழுதியதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சுப்பிரமணிய முதலியார் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமயத்திற்கு செய்த பங்களிப்புகள் அளப்பரியவை. இவரது பணிகள் தமிழ் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி அன்று தனது 83ஆம் வயதில் திருப்போரூரில் சுப்பிரமணிய முதலியார் காலமானார்.

Whats_app_banner

டாபிக்ஸ்