தமிழ் செய்திகள்  /  Astrology  /  Explanation Of Meelnokku Naal, Keezhnokku Naal, Samanokku Naal Mentioned In The Tamil Calendar

Tamil Calendar: ’மேல்நோக்கு நாள்! கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?’ வியக்க வைக்கும் தமிழரின் வானியல் தத்துவம்!

Kathiravan V HT Tamil
Feb 07, 2024 01:11 PM IST

”இது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்று என ஜோதிடர்கள் கூறுகின்றனர்”

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் குறித்த விவரம்
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் குறித்த விவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நிலநடுக்கோட்டிலிருந்து சூரியனின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என பிரிக்கப்பட்டுள்ளது. 

மேல் நோக்கு நாட்களில் வீட்டுக்கு கூறை போடுதல், கட்டிடங்களும் மனை முகூர்த்தம் செய்தல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளை செய்யலாம்.

ரோகினி, திருவாதரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட நாட்கள் மேல்நோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது. 

கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், போர்வேல் போடுதல், சுரங்கல் தோண்டுதல், கட்டடங்களுக்கு அடித்தளம் போடுதல், நிலத்திற்கு கீழே மகசூல் தரும் செடிகளை விதைப்பது, நடுவது, அறுவடை செய்வது, நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்வது நன்மை தரும்.

கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது.

சம நோக்கு நாளில் பூமியின் தளத்தில் சமமான பணிகளை செய்ய உகந்த நாட்களாக உள்ளது. பூமியை உழுதல், சாலைகளை அமைத்தல், வீட்டிற்கு தளம் போடுதல் உள்ளிட்ட பணிகளை இந்த நாளில் செய்வது நன்று. 

மேலும் சுப காரியங்கள், முகூர்த்த ஓலைகள் எழுதுவது மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் செய்வது நன்மையை தரும் என பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் கூறுகிறார். 

அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்கள் சமநோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது. 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்