Ennai Kathirikai Kulambu: கறி குழம்பு தோற்று போகும் ருசியில் செட்டி நாடு ஸ்பெஷல் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யலாமா!
Ennai Kathirikai Kulambu: நீங்கள் செய்யும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இன்னும் ருசியாக இருக்க வேண்டுமா.. இந்த மாதிரி செய்து பாருங்க. கறி குழம்பு கூட தோற்று போகும்

நாம் தினமும் விதவிதமாக குழம்பு செய்தாலும் நம் வீட்டில் இருப்பவர்கள் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு என்றால் அதற்கு தனியாக ஒரு சாப்பாடு சாப்பிடுவார்கள். நீங்கள் செய்யும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இன்னும் ருசியாக இருக்க வேண்டுமா.. இந்த மாதிரி செய்து பாருங்க. கறி குழம்பு கூட தோற்று போகும்.
செட்டி நாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 1/2கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
பூண்டு - 20 பல்
கசகசா - 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
சோம்பு - 1 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
நல்லெண்ணெய்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
வெல்லம்- 1 ஸ்பூன்
பெருங்காயம் - ½ ஸ்பூன்
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும்.
இதில் சின்ன 150 கிராம் சின்ன வெங்காயம் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் கசகசா, 2 ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் தேங்காய் துருவல் 4 ஸ்பூன் மற்றும் 3 தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி லேசாக வதங்க ஆரம்பிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 டீ ஸ்பூன் மிளகாய் தூள், தனியாதூள் 2 டீ ஸ்பூன் சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பையும் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்து கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதை ஒரு தட்டில் வைத்து ஆற விட வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கும் போது ஒரு 5 முந்திரி பருப்பை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் அரை ஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்க வேண்டும். பின்னர் மீதமுள்ள வெங்காயம், பூண்டு வதக்க வேண்டும். அதில் பிஞ்சான கத்தரிக்காயை உங்கள் விரும்பம் போல் வெட்டி சேர்த்து கொள்ளலாம். கத்தரிக்காயை ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். கத்தரிக்காய் பாதி வதங்கிய பிறகு அதில் நாம் ஏற்கனவே வதக்கி அரைத்த பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். மீண்டும் 2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் கரைத்து வைத்த புளி தண்ணீரை விட்டு மஞ்சள் தூள் சேர்த்து குழம்பை கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் கத்தரிக்காய் குழம்புக்கு தேவையான உப்பை கவனித்து சேர்த்து கொள்ள வேண்டும். குழம்பு பதத்திற்கு வந்தவுடன் அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதோடு ஒரு அப்பளம் இருந்தால் போதும். ருசி அசத்தலாக இருக்கும்.

டாபிக்ஸ்