Eachanari Vinayagar Temple: ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு வெள்ளியில் கதவா!
பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் போனதால் ஈச்சனாரியில் எழுந்தருளினார் விநாயகர்
கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு ஒரு கோடி மதிப்பிலான வெள்ளிக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவை மாவட்டம், ஈச்சனாரி. அருள்மிகு விநாயகர் திருக்கோயில் மூலவர் சன்னதிக்கு ரூ,1கோடி மதிப்பீட்டில் வெள்ளிக்கதவுகள் அமைக்கப்படும் என சட்டமன்ற அறிவிப்பு 2022-2023ல் (மானியக்கோரிக்கை எண்.47) அறிவித்திருந்தார்.
இந்த சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி பெற்று 03.03.2023 அன்று உபயதாரர் ரவிச்சந்திரன் மற்றும் கோவை, துணை ஆணையர் சரிபார்ப்பு அலுவலர், செ.வ.ஹர்சினி மற்றும் குழுவினர், இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் அழகுமகேஸ்வரி , இத்திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் தி.ரா.விஜயலட்சுமி, திருக்கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் அர்த்தமண்டப நிலை மற்றும் புதியதாக செய்த மரக்கதவுகளுக்கு வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈச்சனாரி விநாயகர் வரலாறு
மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் செய்து அங்கிருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்தது. இதனால் தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டார், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்கு படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.
ஈச்சனாரி திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்ட வருகிறது. தமிழகத்திலேயே விநாயகருக்கு தங்கத்தேர் பவனி இங்கு தான் நடைபெறுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்