தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ’இனி இவர்களை அசைக்கவே முடியாது!’ 2024ஆம் ஆண்டில் குரு பலம் பெரும் ராசிகள் இதுதான்!’

Guru Peyarchi 2024: ’இனி இவர்களை அசைக்கவே முடியாது!’ 2024ஆம் ஆண்டில் குரு பலம் பெரும் ராசிகள் இதுதான்!’

Kathiravan V HT Tamil
Apr 23, 2024 09:36 PM IST

”Guru Peyarchi 2024: ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும்”

குரு பெயர்ச்சி 2024-25இல் குரு பலம் பெரும் ராசிகள்
குரு பெயர்ச்சி 2024-25இல் குரு பலம் பெரும் ராசிகள்

ஜோதிடத்தில், குரு பலம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. 

9 கிரகங்களில் ஒருவரான குரு பகவான், "தேவர்களின் ஆசிரியர்" என அழைக்கப்படுகிறார். "ஞானத்தின் கிரகம்" என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தைக் குறிக்கிறது. ஜாதகத்தில் குரு பலமாக இருக்கும்போது, ​​அது பின்வரும் பலன்களைத் தரக்கூடும்:-

நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு

ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும்.

கல்வி மற்றும் ஞானம்: 

கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றிற்கு குரு பலம் உதவும்.

திருமணம் மற்றும் குழந்தைகள்: 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு குரு பலம் வழிவகுக்கும்.

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு:

நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மன அமைதி ஆகியவற்றை குரு பலம் தரும்.

தொழில் மற்றும் சமூக வெற்றி:

தொழில் முன்னேற்றம், சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதை ஆகியவற்றைப் பெற குரு பலம் உதவும்.

குரு பலம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

ஜாதகத்தில் குரு எந்த ராசியில் அமைந்துள்ளது என்பது முக்கியம். கேந்திர (1, 4, 7, 10) அல்லது திரிகோண (5, 9) ராசிகளில் குரு அமைந்திருந்தால் அது பலமாக கருதப்படுகிறது.

குருவின் பார்வை:-

குரு எந்த ராசிகளைப் பார்க்கிறது என்பதும் முக்கியம். 5, 7 மற்றும் 9 ஆம் ராசிகளை குரு பார்ப்பது நல்லது.

குருவின் தசா மற்றும் புக்தி காலங்களில், ஒருவர் தங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களை அனுபவிக்கலாம்.

குரு பகவான் இடம் பெயர்வதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து ராசிக்காரர்களுக்கு குரு பலம் வந்துவிட்டது என கணிப்பார்கள். 

அந்த வகையில் தற்போது மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ஐந்து ராசிகள் குரு பலம் பெருகிறது. 

குரு பலம் பெற்ற ராசிகளின் வீட்டில் திருமணம் உட்பட சுபகாரியங்கள் என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் நடைபெறும். 

சுபகாரியங்கள் மட்டுமின்றி வீடு, கார், பதவி உள்ளிட்டவை பெற வேண்டும் என எண்ணுவோருக்கு அது கிடைக்க குரு பலம் வழி வகுக்கும். 

குரு பலம் இல்லை என்றால் திருமணமே செய்ய முடியாதா என்றால் உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி பலமாக இருந்தால் குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம் என ஜோதிடர் வேலூர் பாலசுப்பிரமணியம் கூறுகிறார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel