Lord Mercury: மீன ராசியில் புதன் பகவானின் வக்ரப் பெயர்வு.. கோடையிலும் குளுமையைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: மீன ராசியில் புதன் பகவானின் வக்ரப் பெயர்வு.. கோடையிலும் குளுமையைப் பெறப்போகும் ராசிகள்

Lord Mercury: மீன ராசியில் புதன் பகவானின் வக்ரப் பெயர்வு.. கோடையிலும் குளுமையைப் பெறப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Apr 06, 2024 04:45 PM IST

Lord Mercury: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் சில ராசியினருக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்துப் பார்ப்போம்.

<p>புதன் பகவான்.&nbsp;</p>
<p>புதன் பகவான்.&nbsp;</p>

அறிவு, இனிமையான பேச்சு, பகையுணர்வு இன்றி பழகுதல், பொலிவு ஆகிய பண்புகளைத் தரும் புதன் பகவான், வரக்கூடிய ஏப்ரல் 9ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாக பெயர்கிறார். மே 10ஆம் தேதி வரை மீன ராசியில் இருக்கும் புதன்பகவான், அதன்பின், மேஷ ராசிக்குச் செல்கிறார்.

இதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

கும்பம்: மீன ராசியில் புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சி, கும்பராசியினருக்குப் பிடித்த கெட்டதுகளை எல்லாம் விலக்கிவிடும். வெகுநாட்களாக மேற்படிப்பு படிக்க நினைத்து, நுழைவுத்தேர்வில் இடம் மறுக்கப்பட்டிருந்தால்,இக்காலகட்டத்தில் முயன்றுபார்த்து தேர்வு எழுதினால் நிச்சயம் நல்ல பலனைப் பெறுவீர்கள். வெகுநாட்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் கும்பராசியினருக்கு வீடு வாங்கும் யோகம் வாய்க்கும். பேருந்தில் பயணித்து வேலைக்குச் சென்றவர்கள், புதிதாக கார் வாங்குவார்கள். இந்த காலகட்டத்தில் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும்.

தனுசு: மீன ராசியில் புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு சில நன்மைகளை வழங்குகிறது. இந்த ராசியினருக்கு, புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் புத்தம்புதிய சொத்துகளை வாங்குவீர்கள். தொழிலில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும். எதிரிகளின் தொல்லை குறையும். உயர் அலுவலர்கள் மற்றும் சகத்தோழமைகளின் ஆதரவு கிட்டும்.

துலாம்: மீன ராசியில், புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் துலாம் ராசியினர் சில யோகங்களைப் பெறுகின்றனர். இந்த காலகட்டத்தில் வாங்கிய கடன் குறையும். நிகர லாபம் அதிகரிக்கும். வம்பு, வழக்குகளில் இருந்து விடுதலைப் பெறுவீர்கள். கை, கால் வலி, முதுகுவலி, கண்ணில் இருந்த எரிச்சல் ஆகியவை குணமாகும். எதிரிகளால் உங்களுக்கு உண்டான கெட்டப்பெயர் மறைந்து, உங்களின் உண்மையான நல்ல குணத்தால், உங்களைத் தவறாக நினைத்தவர்கள் வருத்தப்படுவார்கள்.

சிம்மம்: மீன ராசியில், புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், சிம்ம ராசியினர் அற்புதமானப் பலன்களைப் பெறுகின்றனர். இத்தனை நாட்களாக உங்களை விட்டு விலகிய சொந்த பந்தங்கள், நண்பர்கள் மீண்டும் வந்து ஒட்டுவார்கள். குடும்பத்தில் இருந்த சஞ்சலங்கள் நீங்கும். இத்தனை நாட்களாக உங்கள் உடலில் இருந்த பிரச்னைகள் மெல்ல குறைந்து ஓரளவு படிப்படியான தேக ஆரோக்கியம் மேம்படும். உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு இத்தனைநாட்களாக கிடைக்காமல் இருந்த பணப்பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்:

மீன ராசியில், புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், மிதுன ராசியினருக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த பிரச்னை ஓரளவு மட்டுப்படும். தொழிலில் சுணக்கமாக இருந்த பணிகள், துறுதுறுவென முன்னேற்றப்பாதைக்குச் செல்லும்.

ரிஷபம்: மீன ராசியில், புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால், ரிஷப ராசியினர் பல நன்மைகளைப் பெறுகின்றனர்.பணி நிமித்தமாக அயல் மாநிலம், அயல்நாடு செல்வீர்கள். இதன்மூலம் வருவாய் இரட்டிப்பாகும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பிறக்கும். உடல் நலம் மேம்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்