தமிழ் செய்திகள்  /  Astrology  /  Due To The Influence Of Lord Shani The Zodiac Signs Should Not Stand In The Election And Should Be Cool

Lord Shani: சனியின் தாக்கம்: எலெக்‌ஷனில் நிற்காமல் சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 16, 2024 08:42 PM IST

சனி பகவானின் தாக்கத்தால் தேர்தலில் போட்டியிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

சனி பகவான்.
சனி பகவான்.

ட்ரெண்டிங் செய்திகள்

இருந்தாலும் சில தவறுகளை செய்யாமல் எச்சரிக்கையுடன் இருந்தால், சனி பகவான் நல்ல பலன்களை செய்யாவிட்டாலும் கெடுபலன்களை செய்யாமல் பார்த்துக்கொள்வார். அப்படி எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பது குறித்துப் பார்ப்போம்.

சனியின் ஆளுகை மற்றும் பார்வையால் அவதிப்படுபவர்கள் மகளிர் மற்றும் வயதில் மூத்தோரை மரியாதை இல்லாமல் நடத்தக்கூடாது என்கிறது சோதிட சாஸ்திரம். அவ்வாறு செய்தால் சனிபகவானுக்கு அறவே பிடிக்காதாம். எனவே, கோபமாகி கெடு பலன்களைக் கொடுப்பாராம்.

அதுமட்டுமின்றி, போதை வஸ்துகளைப் பயன்படுத்துவது, பிறரின் பணத்துக்கு ஆசை படும் எண்ணம், தவறான நட்புகள்,

அடுத்தவரை பழிவாங்கும் எண்ணம் இருத்தல் கூடாது, வன்மம் கொண்டு செயல்பட்டால், சனி பகவான் பெரியளவில் பிரச்னைக்கு உள்ளாவார்.

சனி பகவானின் பார்வையால் தேர்தலில் நிற்கும்போது எச்சரிக்கையாகவும் சில நேரத்தில் தேர்தலில் நிற்காமலும் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

கடகம்: நீதிமானான சனி பகவானின் தாக்கத்தால் கடக ராசியினர் மிகுந்த அளவில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சனி பகவானின் பார்வையால் சிறிய கவனக்குறைவு கூட பெரிய அளவில் பிரச்னையை உண்டாக்கி விடும். எனவே, வயதானவர்கள் மற்றும் முதியவர்களை துட்சமாக நினைத்துப் பேசாதீர்கள். யாரையும் பழிவாங்காதீர்கள், பழிவாங்க நினைத்தால் உங்களுக்குண்டான தண்டனையை சனி பகவான் கொடுப்பார். எனவே, பொறுமையும் அமைதியும் தேவை.

இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கலாம். இது உங்கள் வேலையைப் பாதிக்கலாம். இது தவிர, உங்களைச் சுற்றி சில எதிரிகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் இமேஜைக் கெடுக்கலாம். உங்களுக்கு துரோகம் செய்யலாம். கவனமாக இருக்கவும். யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், சற்று இணக்கமில்லாத சூழல் இருக்கும். உங்கள் கூட்டாளருடன் ஒருங்கிணைப்பைப் பேணுவதில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்: இந்த ராசியினர் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். அவசரப்பட்டு தேர்தலில் போட்டியிட நினைக்காதீர்கள். எந்தவொரு பிராப்பர்டி வாங்கும்போதும் கவனமாக இருத்தல் வேண்டும். உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்னைகள் வரலாம். எனவே சரியான எச்சரிக்கையை பராமரிக்கவும். ஆடம்பர மற்றும் பொருள் இன்பங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் சேமிப்பைப் பாதிக்காத வகையில் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். தேர்தலில் இக்காலத்தில் போட்டியிடாமல் இருப்பது நல்லது. 

மகரம்: மகர ராசியின் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. வேலையில், உங்கள் முதலாளி மற்றும் சக ஊழியர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். இது மோதலுக்கும் வழிவகுக்கும். உங்கள் எதிரிகளில் சிலர் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களின் தந்திரங்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீங்கு விளைவிக்கும். அனைவரிடமும் பழகும் போது பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடாதீர்கள். 

கும்பம்: இந்த ராசியினருக்கு ஏழரை நாட்டுச் சனியின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஒவ்வொரு விசயங்களிலும் கவனமாக இருங்கள். இது தேவையற்ற சர்ச்சைகளில் சிலரை மாட்டவைக்கும். பெயரை கெடுக்கும். எனவே, இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடவேண்டாம்.

மீனம்: இந்த ராசியினருக்கு ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பர். 2024ஆம் ஆண்டு முடியும் வரை எச்சரிக்கை தேவை. உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அலுவலகத்தில் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்