Sani Luck : 2025 வரை கும்ப ராசியில் சனி பயணம்.. இந்த மூன்று ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொட்ட போகிறார்!
இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பயணம் செய்ய உள்ள காரணத்தினால் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் இருப்பார். இந்த ஆண்டு சனி கும்ப ராசியில் மட்டுமே இருப்பார். ஆனால் அவர்களின் நிலைமையில் சிறிது மாற்றம் இருக்கும். சனியின் நிலை மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நிதி ஆதாயங்களுடன் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். இதனுடன், உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். இவர் கர்மநாயகனாக விளங்கி வருகிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய பிரதான வேலையாகும். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவதால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
அந்த வகையில் சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் இவர் பயணம் செய்ய உள்ள காரணத்தினால் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனி பகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். இதுவரை இல்லாத அளவிற்கு உங்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் திடீர் பண வரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷப ராசி
சனிபகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து வருவாய் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகர ராசி
சனி பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சனி பகவானும் சுக்கிர பகவானும் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் உங்களுக்கு எப்போதும் கருணை மழை பொழிவார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்