தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  July Horoscope 2024: மாறுது கிரகம்.. ஜூன் போய் ஜூலை வந்ததால் டாப் ஆக வரப்போகும் ராசிகள்!

July Horoscope 2024: மாறுது கிரகம்.. ஜூன் போய் ஜூலை வந்ததால் டாப் ஆக வரப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Jul 01, 2024 05:14 PM IST

July Horoscope 2024: கிரக மாற்றத்தால் ஜூன் போய் ஜூலை வந்ததால் டாப் ஆக வரப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

July Horoscope 2024: மாறுது கிரகம்.. ஜூன் போய் ஜூலை வந்ததால் டாப் ஆக வரப்போகும் ராசிகள்!
July Horoscope 2024: மாறுது கிரகம்.. ஜூன் போய் ஜூலை வந்ததால் டாப் ஆக வரப்போகும் ராசிகள்!

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் ராசிகளை மாற்றும். சுக்கிரன் கடக ராசியில் நுழைவார். கிரகங்களின் அரசனான சூரியனும் கடகத்தில் சஞ்சரிக்கும். செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றின் நிலையும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரக ராசியின் மாற்றத்தின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் பணவரவு மற்றும் பல்வேறு நல்வாய்ப்புகளைப் பெறப்போகும் டாப் கியர் ராசிகள் குறித்துக் காண்போம்.

ரிஷபம்:

பிறந்த ஜூலை மாதத்தில், ரிஷப ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க பல கவர்ச்சிகரமான வாய்ப்புகளைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ரிஷப ராசியினருக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். பழைய வழிகளிலிருந்தும் பணம் உருவாகும். மொத்தத்தில் ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களின் எந்தவொரு கனவும் ஜூலை மாதத்தில் நனவாகும். வரப்போகும் மாதத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேங்கிய பணிகளும் முடிவடையும் வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னை மெல்ல மெல்ல சரியாகும். எதிரிகளை புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். பழிவாங்காதீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் தொழிலில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக செயல்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் எந்த கடினமான பணியிலும் வெற்றி பெறலாம். நீதிமன்றத்தில் வெற்றி சாத்தியமாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

இந்த நேரம் துலாம் ராசிக்காரர்களுக்கு வரமான விஷயங்கள் கைவந்துசேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த கனவையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார சூழ்நிலையில் நல்லவிதமாக மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து போனால் வெற்றியைப் பெற முடியும்.

மகரம்:

ஜூலை மாதம் மகர ராசிக்காரர்களுக்கு வசதிகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொறுமை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பும் சாதுர்யமும் பலரால் பாராட்டை உண்டாக்கும்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்