தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dream Shastra: உடைந்த கண்ணாடி, கிழிந்த துணி..! துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள் இவைதான்

Dream Shastra: உடைந்த கண்ணாடி, கிழிந்த துணி..! துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள் இவைதான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 06, 2024 09:45 PM IST

கனவில் காணப்படும் சில நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் எதிர்காலத்தில் நிகழ இருக்கும் ஆபத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். கனவு சாஸ்திரத்தின்படி, என்னென்ன கனவுகள் வந்தால் எதிர்காலத்தில் துர்திர்ஷ்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள்
துர்தஷ்ட சூழ்நிலை, ஆபத்தை வெளிப்படுத்தும் கனவு அறிகுறிகள்

தூக்கத்தில் வரும் கனவுகள் பல நேரங்களில் மகிழ்ச்சியான நிகழ்வுகளாக இருக்கும். சிலருக்கு அச்சமூட்டும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் துன்பமான கனவுகளும் நிகழலாம். சிலர் கனவுகளால் பயந்தோ அல்லது அச்சமடைந்தோ தூக்கம் களைந்து எழுவதும் உண்டு.

நாம் காணும் பெரும்பாலான கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஒரு சில கனவுகள் மறக்கவே முடியாமல் வியக்கத்தக்க வகையில் நாள் முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். சிலர் இரவில் கண்ட கனவைப் பற்றி நீண்ட நேரம் யோசிப்பார்கள். கெட்ட கனவு நனவாகும் என்று பலரும் அச்சம் ஏற்படுவதுண்டு.

பெரும்பாலான கனவுகள் நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத வகையில் இருக்கும். வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத நிகழ்வுகள் அல்லது விஷயங்களைப் பற்றியும் கனவுகள் வரலாம்.

கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் காணப்படும் சில பொருள்கள் அல்லது நிகழ்வுகள் சில அர்த்தங்களை கொண்டதாக இருக்கின்றன. கனவில் சில பொருட்களை பார்ப்பது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. என்னென்ன பொருள்கள் கனவுகளில் வந்தால் அபத்தம் என்பது பற்றி பார்க்கலாம்

கிழிந்த ஆடைகள்

உங்கள் கனவில் கிழிந்த ஆடைகளை வந்தால், உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. கிழிந்த ஆடைகள் எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்கும் தோல்விகளைக் குறிக்கின்றன.

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் போது, ​​மனதில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும் போது, ​​நிலையற்ற தன்மை ஏற்படும் போது இத்தகைய கனவுகள் காணப்படுகின்றன.

உடைந்த கண்ணாடி

கனவு சாஸ்திரத்தின் படி, ஒரு கனவில் உடைந்த கண்ணாடியைப் பார்ப்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று ஒருவரின் வாழ்க்கை இலக்குகள் அல்லது லட்சியங்கள் தடம் புரண்டது என்பதற்கான குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

மற்றொன்றாக இந்த கனவு திருமணத்தில் பிளவு, விவாகரத்து, காதலர்களின் முறிவு, உறவினர்களுடனான உறவு முறிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. அதாவது, உடைந்த கண்ணாடி எதிர்மறை ஆற்றலை பிரதிபலிக்கிறது.

புயல், நீர்வீழ்ச்சி வருவது

கனவில் உரத்த புயல்கள் மற்றும் ஆழமான நீர்வீழ்ச்சிகள் வருவது, குடும்பத்தில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன. ஆழமான நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பது உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர்கொள்வதற்கான அறிகுறியாகும்.

நீங்கள் காற்று அல்லது பலமாக புயல் வீசும் அலைகளைப் பார்த்தால், வரவிருக்கும் பிரச்னைகளை நீங்கள் மிகவும் கவனமாக சமாளிக்க வேண்டும் என்று அர்த்தம் என கூறப்படுகிறது.

பல் உடைவது

பற்கள் சக்தி, தகவல் தொடர்பு மற்றும் வெளிப்பாட்டின் சின்னமாக உள்ளது. பற்களைக் உடைவது அல்லது காணாமல் போவது போல் கனவு காண்பது பாதுகாப்பின்மை மற்றும் வரவிருக்கும் துரதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இது உங்களின் சக்தி, ஆதிக்கம் குறைவு ற்படுவதற்கான அறிகுறியாகும். இந்த கனவு, எதிர்மறை ஆற்றலை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

குழப்பான கனவுகள்

சில நேரங்களில் கனவுகளிலும் குழப்பங்கள் ஏற்படும். எந்த முடிவும் எடுக்க முடியாமல், இருப்பதை குறிக்கும் விதாக இந்த கனவு வருகிறது. இவற்றை ஒரு எச்சரிக்கையாகவே கருத வேண்டும். இந்த கனவு வந்தால் உங்களது இலக்குகளை மறுசீரமைத்து, முடிவுகளில் மாற்றமும் தேவைப்படலாம். இத்தகைய கனவுகள் கவனமாக முடிவெடுப்பதை ஊக்குவிக்கின்றன.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்