தமிழ் செய்திகள்  /  Astrology  /  Double Gajakesari Yoga Formed And Lucky Zodiac Signs

Double Gajakesari Yoga: உருவாகும் இரட்டை கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 20, 2024 05:12 PM IST

துலாம் ராசியில் புதன் பகவான், சந்திர பகவான், குரு பகவான் ஆகியவற்றின் சேர்க்கையால் இரட்டை கஜகேசரி யோகத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

துலாம் ராசியில் புதன் பகவான், சந்திர பகவான், குரு பகவான் ஆகியவற்றின் சேர்க்கை
துலாம் ராசியில் புதன் பகவான், சந்திர பகவான், குரு பகவான் ஆகியவற்றின் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி வரக்கூடிய மார்ச் 27ல், சந்திர பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் முன்பே செல்வச் செழிப்பை தரும் புதன் பகவானும், நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் குரு பகவானும் இருக்கிறார்கள். இதனுடன், சந்திர பகவான், துலாம் ராசியில் ஏறி பயணிப்பதால், இரட்டை கஜகேசரி யோகம் உண்டாகிறது.

இந்த இரட்டை கஜகேசரி யோகத்தால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. அப்படி நல்வாய்ப்பினைப் பெறப்போகும் ராசிகள் குறித்த கட்டுரையினைப் பார்ப்போம்.

மகரம்: துலாம் ராசியினருக்கு சந்திர பகவான், புதன் பகவான் மற்றும் குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்று சேர்வதால், உண்டான இரட்டை கஜகேசரி யோகம், மகர ராசியினருக்கு நன்மையைத் தர இருக்கிறது. இந்த காலத்தில் உங்கள் இல்லறத்துணையுடன் இருந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். அம்மா, அப்பாவுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். இந்த காலத்தில் புதிய வருவாய் ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள், கிடைப்பார்கள். அதனால், வியாபாரம் அதிகரிக்கும். தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். இந்த காலத்தில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நடப்பது உறுதி. குடும்ப வாழ்வில் இருந்தவர்களுக்கு உறவுச்சிக்கல்கள் தீரும்.

துலாம்: துலாம் ராசியினருக்கு சந்திர பகவான், புதன் பகவான் மற்றும் குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்று சேர்வதால், உண்டான இரட்டை கஜகேசரி யோகம், துலாம் ராசியினருக்கு நன்மையைத் தருகிறது. இத்தனை நாட்களாக குழப்பத்தில் சிக்கித்தவித்து வாழ்க்கையை விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆகும் அளவுக்கு துலாம் ராசியினருக்குத் துன்பம் இருந்திருக்கும். அது இந்த இரட்டை கஜகேசரி யாகத்தால், மாறும். இத்தனை நாட்களாக தடைபட்ட திருமணத்தடை தற்போது சரியாகி வரன் அமையும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். மேற்படிப்பு படிக்கக் கூடாது என பல தடங்கல்கள் வந்தாலும் இந்த காலத்தில் அது நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளாசியால் உங்களது கடுமையான உழைப்புக்கு நன்மை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையலாம். இத்தனை நாட்களாக இருந்த மனப் பதற்றம் நீங்கும். உங்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களால் தடைபட்ட பிரச்னைகள் சரியாகும். 

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு சந்திர பகவான், புதன் பகவான் மற்றும் குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்று சேர்வதால், உண்டான இரட்டை கஜகேசரி யோகம், விருச்சிக ராசியினருக்கு நன்மையைத் தருகிறது. இந்த இரட்டை கஜகேசரி யோகத்தால் அயல்நாடு செல்ல முயற்சித்தால் நிச்சயம் நல்ல பலன்கிடைக்கும். இந்த காலத்தில் வெளியூர், வெளிமாநிலம் ஆகியவற்றில் நல்ல சம்பளத்தில் பணி கிடைத்தால் சென்றுவிடுங்கள். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். இந்த காலத்தில் வீட்டடி மனை, தங்கம், புதிய வாகனங்கள் ஆகியவற்றினை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பார்ட்னர்களுடன் இணைந்து தொழில் செய்தால் வருவாய் கிடைக்கும். இந்த காலத்தில் கணவன் - மனைவி இடையே அந்நியோன்ய அதிகரிக்க நீங்கள் செய்யும் முயற்சிகள் எதிர்காலத்துக்கு நன்மை தரும். தயவு செய்து, அடுத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளால் மட்டும் தூண்டப்படாமல் இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.  

WhatsApp channel

டாபிக்ஸ்