உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. தடை நீக்கும் பரிகாரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. தடை நீக்கும் பரிகாரம் இதோ!

உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. தடை நீக்கும் பரிகாரம் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 16, 2024 01:10 PM IST

பௌர்ணமி வானில் பிரகாசமாக தோன்றும் அற்புதமான நாள். முழு நிலவாய் இருக்கும் இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் இருக்கும் சக்தி மிகுந்த நாளாகவும் காணப்படுகிறது. இந்த நாளில் நம் குலதெய்வமாக இருக்கும் பெண் தெய்வத்தை தேவியாக வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியில் இருந்தும் விடுபடலாம்.

உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. கஷ்டம் நீங்க பரிகாரம் இதோ!
உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க.. வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு.. கஷ்டம் நீங்க பரிகாரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

பௌர்ணமியில் குல தெய்வ வழிபாடு

நம் குலத்தை காக்கும் தெய்வமே குல தெய்வம். பெண்களுக்கு குல தெய்வம் திருமணத்திற்கு பின் மாறுபடும். ஆண்களுக்கு எப்போதும் ஒரே குல தெய்வம்தான். நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குல தெய்வ வழிபாட்டில் பௌர்ணமிக்கு சிறப்பு பங்கு உள்ளது.

பௌர்ணமி நாளிலே குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்று. குலதெய்வ கோயில் அருகில் இருந்தால் பௌர்ணமி பௌர்ணமிக்கு சென்று நீங்கள் வழிபடுவது நல்லது. இது நமக்கு நன்மைகளை வாரி வழங்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குலதெய்வம் பூர்வீக கிராமத்தில் இருக்கிறது. அதனால் நீங்கள் மாத தோறும் பௌர்ணமி நாளில் அங்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே வீட்டிலே விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம் உங்களுடைய குலதெய்வ படத்திற்கு மாலையிட்டு அல்லது பூக்களால் அலங்கரித்து குலதெய்வத்திற்கு மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் போன்றவற்றை நீங்கள் குலதெய்வத்திற்கு நெய்வேதியமாக செய்து வேண்டிக் கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுத்து வாருங்கள். மாதாமாதம் பௌர்ணமி நாளில் இந்த வழிபாடு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கும்.

தொடரும் தடைகள்

மேலும் யார் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை தவற விடுகிறார்களோ அவர்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக தொழில் வீழ்ச்சி,வேலையில் முன்னேற்றம் இல்லாமை குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமை சிரமங்களை எதிர்கொள்வது போன்ற சிக்கல்களை அவர்கள் தொடர்ந்து சந்தித்து கொண்டே வருவதை நாம் பார்க்கமுடியும்.

அப்படியானவர்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட அவர்கள் கட்டாயம் குலதெய்வத்தின் அருள்பெறுவது அவசியம் ஆகிறது.

பௌர்ணமியில் குல தெய்வ வழிபாடு

எப்போதும் நம்வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் பிற நாட்களில் குலதெய்வத்தின் அருளை பெறுவதை காட்டிலும் பெளர்ணமி நாள் அன்று குலதெய்வம் சென்று அன்று 27 நெய் அகல் தீபம் ஏற்றி வர வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.

மேலும் நீண்ட நாள் பணக்கஷ்டம் ,மனக்கஷ்டம் தீரும்,தொழில் முடக்கம் திருமண தடை மோசமான தசா/ புக்திகளின் பாதிப்பு இவைகளில் இருந்து அவர்களுக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.