தமிழ் செய்திகள்  /  Astrology  /  Donate These Pulses, Your House Will Be Filled With Blessings

Good Luck: செல்வ செழிப்புடன் இருக்க..! நீங்கள் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 26, 2024 04:00 PM IST

தானம் செய்வது சிறந்த அறமாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் தானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில பருப்பு வகைகளை தேவைப்படுவோருக்கு தானம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. செல்வ செழிப்புடன் இருக்க கண்டிப்பாக தானம் செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

செல்வ செழிப்புடன் இருக்க தானம் செய்ய வேண்டிய விஷயங்கள்
செல்வ செழிப்புடன் இருக்க தானம் செய்ய வேண்டிய விஷயங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறருக்கு தானம், உதவி செய்வதால் புண்ணிங்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருந்து வருகிறது. பலனை எதிர்பார்க்காமல் செய்யும் தானம் நன்மையை தரக்கூடியதாக இருக்கும். அதே வேலையில் முறையாக செய்யும் தானங்களினால் உரிய பலன் பெறலாம்.

உங்கள் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் பெற வேண்டுமானால் சில பொருள்களை, குறிப்பாக இந்த பருப்பு வகைகளை தானம் செய்வது நன்மையும், செல்வ செழிப்பும் பெறலாம் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

வேத ஜோதிட சாஸ்திரப்படி பருப்பு தானம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவை ஆரோக்கியமானவை மட்டுமல்ல, சமய செயல்பாடுகளிலும் முக்கியமானவையாக உள்ளது. பருப்பு வகைகளை தானம் செய்வதன் மூலம், ஒரு நபர் நிதி நிலைமை மேன்மையடைவதுடன், வாழ்க்கையில் ஏற்படும் பல சிக்கல்களில் இருந்து விடுபடுகிறார் என கூறப்படுகிறது.

இந்த பருப்பு வகைகளை தானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் பெறலாம். எந்தெந்த பருப்பு வகைகளை தானம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

கருப்பு எள்ளு

கருப்பு எள்ளுவை சனிக்கிழமை தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை மங்களகரமானவை என்றும் நம்பப்படுகிறது. சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரியது என்பதால் அந்த நாளில் கருப்பு எள்ளு தானம் செய்வதால் சனியின் அருள் கிடைக்கும்.

கருப்பு எள்ளு எதிர்மறை ஆற்றலில் இருந்து விடுபட உதவுகின்றன. வியாபாரத்தில் உள்ள தடைகளை நீக்க இந்த பரிகாரம் பயனுள்ளதாக இருக்கும்.

மோசமான ஆற்றல் காரணமாக அவதிக்குள்ளாகி இருப்பவர்கள், கருப்பு எள்ளு தானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். சிறிதளவு உளுந்து பருப்பை எடுத்து, பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றி எறிந்து, தெற்கு நோக்கி வீசவும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

சிறிதளவு கருப்பு எள் எடுத்து, பாதிக்கப்பட்ட நபரை சுற்றி எறிந்து பின்னர் தென் பகுதி நோக்கி வீசுவதன் மூலம், எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் எண கூறப்படுகிறது.

துவரம் பருப்பு

உங்கள் ஜாதகத்தில் வியாழன் பலவீனமாக இருந்தால், தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் மற்றும் தடைகள் நிறைந்ததாக இருந்தால், புதன்கிழமைகளில் துவரம் பருப்பு தானம் செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் குரு பகவானின் சிறப்பு அருள் பெற்று அதிர்ஷ்டம் உண்டாகும்.

மசூர் பருப்பு

ஜாதகத்தில் செவ்வாய் நிலை பலவீனமாகவோ அல்லது தோஷத்தால் பாதிக்கப்பட்டவராகவோ இருந்தால் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மசூர் பருப்பு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தவறுகள் நீங்கி, செவ்வாயின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

பாசிப்பருப்பு

புதன்கிழமைகளிலம் பாசிப்பருப்புகளை தானம் செய்வதன் மூலம் விநாயகரின் அருளை பெறலாம். உத்தியோகம், வேலைகளில் இருந்து வரும் தடைகள் நீங்கும். அத்துடன் நிதிநிலையிலும் ஆதாயம் பெறலாம். அதிர்ஷ்டம் பின்தொடரும்

பட்டாணி

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழக்கிழமை விஷ்ணுவுக்காக அர்பணிக்கப்படுகிறது. பட்டாணி தானம் செய்வதன் மூலம் லட்சுமி, விஷ்ணு கடவுளின் ஆசியை பெறலாம். வாழ்க்கையில் கஷ்டங்களையும், பிரச்னையையும் அனுபவிப்பவர்கள் பட்டாணியை தானம் செய்யலாம்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

விஷ்ணு பாக்கியம் கிடைக்கும். இது வியாழன் கிரகத்தின் மோசமான விளைவுகளைப் போக்கவும் உதவுகிறது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்