குலதெய்வம் கோபம் தணிய வேண்டுமா.. இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்..குல தெய்வ பூஜையின் முக்கியத்துவம் இதோ!
குலத்தை காப்பதும், முன்னேற்றத்துக்கு கொண்டு வருவதும் குலதெய்வம் என்ற நம்பிக்கை பொதுவாக எல்லோருக்கும் உள்ளது. நமது இஷ்ட தெய்வம் என்ற பெயரில் நம் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றி மாற்றி வழிபாடு செய்யலாம். அது நம் தனிப்பட்ட பிரியம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது அப்படி இல்லை.
ஒவ்வொரு குடும்பங்களுடைய அடையாளம் அவர்களுடைய குலதெய்வம். அதாவது அந்த குலத்தை காப்பதும், முன்னேற்றத்துக்கு கொண்டு வருவதும் குலதெய்வம் என்ற நம்பிக்கை பொதுவாக எல்லோருக்கும் உள்ளது. நமது இஷ்ட தெய்வம் என்ற பெயரில் நம் விருப்பத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றி மாற்றி வழிபாடு செய்யலாம். அது நம் தனிப்பட்ட பிரியம். ஆனால் குல தெய்வ வழிபாடு என்பது அப்படி இல்லை. இங்கு குல தெய்வ வழிபாடு என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
குல தெய்வ வழிபாடு அவசியமா?
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு குலம் விருத்தி அடைய வேண்டும் என்றால் குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பது ஐதீகம். நம் முன்னோர்கள் காலத்தில் மறைந்த முன்னோர்களை குல தெய்வமாக ஏற்று வழிபட ஆரம்பித்தனர். நம் முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாக வழிபடுவார்களோ அதுவே நமக்கும் குல தெய்வம். நாம் இஷ்ட தெய்வத்தை மாற்றி கொள்ளலாம். ஆனால் குல தெய்வத்தை மாற்றவே முடியாது.
குல தெய்வ பூஜையின் முக்கியத்துவம்
நாம் எந்த ஒரு வழிபாட்டை செய்யும் போதும் குல தெய்வத்தை முதலில் வணங்கி விட்டு தான் வீட்டில் பூஜைகளை செய்ய வேண்டும். நம் வீட்டில் திருமணம், கிரக பிரவேஷம் என எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் முதலில் குல தெய்வத்தை மனதில் வணங்கி ஆரம்பிக்க வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் குல தெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் செயல்களை தொடங்கலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் குல தெய்வத்தை வணங்கி மஞ்சள் துணியில் பணத்தை முடிந்து வைத்து வழிபாடு செய்த பின் நல்ல காரியங்களை தொடங்கலாம்.
குலதெய்வம் கோபம் தணிய பரிகாரம்
அப்படியாக சில குடும்பங்களுக்கு குலதெய்வத்தின் சாபம் உண்டாகுவதையும் குலதெய்வம் அவர்கள் மீது கோபம் கொண்டு இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
அவ்வாறு குலதெய்வத்திற்கு கோபம் ஏற்பட்ட குடும்பங்களில் தீர்க்க முடியாத சில பிரச்சனைகள் உருவாகி கொண்டு இருக்கும். அப்படியாக அவ்வாறு ஏற்பட்ட குலதெய்வத்தின் கோபத்தை எவ்வாறு நீக்குவது? அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
அடுத்ததாக நம்முடைய வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எலுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு, அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் . பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும். இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். இந்த பரிகாரம் செய்ய தொடங்கும் போதே உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை உணர முடியும்.
மேலும் பரிகாரம் செய்து முடிக்கும் முடிவில் இன்னும் நிறைய மாற்றங்களை நம்மால் உணர முடியும். தொடர்ந்து குல தெய்வத்தை அவர் அவர் வணங்கும் முறையில், நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்த முறையில் வழிபாடு செய்வதால் வீட்டில் துன்பங்கள் நீங்க மென்மேலும் நம்மை பெருகும். மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்