தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தி - எந்த ராசியினருக்கு எல்லாம் சிறப்பாக இருக்கப்போகிறது தெரியுமா?

Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தி - எந்த ராசியினருக்கு எல்லாம் சிறப்பாக இருக்கப்போகிறது தெரியுமா?

Marimuthu M HT Tamil
Apr 21, 2024 04:29 PM IST

Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தியின் எந்த ராசியினருக்கு எல்லாம் நன்மைகள் கிடைக்கப்போகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி

சித்திரை மாதத்தின் பௌர்ணமி நாளான வரும் ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், மீன ராசியில் புதாத்திய ராஜயோகம், சஷ ராஜ யோகம் மற்றும் பஞ்சகிரக யோகம் ஆகியவற்றின் கூட்டுப்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அனுமன் ஜெயந்தியின் மறுநாளில், சுக்கிரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அனுமன் ஜெயந்தியன்று நன்மைகள் பெறும் 5 ராசியினர் குறித்துப் பார்க்கலாம். அவையாவன:-

மேஷம்: அனுமன் ஜெயந்தி நாளில், மேஷ ராசிக்காரர்களுக்கு வெகுநாட்களாக கிடைக்காமல் இருந்த பணப்பலன்கள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இத்தனை நாட்களாக திருமண வாழ்வில் கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் ஆதரவின்றி தவித்து வரும் மேஷ ராசியினருக்கு, அனுமன் ஜெயந்தியில் இருந்து மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மிதுனம்: அனுமன் ஜெயந்தி அன்று மிதுன ராசிக்காரர்கள் கடன் தொல்லையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆஞ்சநேயரின் அருளால் அன்றைய தினம் புதிய காரியங்களைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். வெற்றியும் கை வசம் வந்துசேரும். அனுமன் ஜெயந்தியின்போது, திருமணத்துக்கு வரன் பார்க்கத் தொடங்காதவர்கள் தொடங்கலாம். காரிய சித்தி உண்டாகும்.

கடகம்: அனுமன் ஜெயந்தி அன்று புதிய தொழில்களைத் தொடங்குவது அதிக நன்மைகளைத் தரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இது இந்த ராசிக்கு நிதி நன்மைகளையும் கொண்டு வரும். மேலும், சனியின் பாதிப்பில் இருந்து வரும் கடக ராசியினர், அனுமன் மந்திரங்களைப் பாராயணம் செய்வதும் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை, அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நல்ல பலனைத் தரும். 

விருச்சிகம்: அனுமன் ஜெயந்தி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரக் கூடியது. சிலருக்கு குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் கைக்கு வந்து சேரும். வேலை தேடும் விருச்சிக ராசியினருக்கு நல்ல பலன்கள் கை வசம் வந்து சேரும். 

கும்பம்: அனுமன் ஜெயந்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது. அரசியலில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் பெரியளவில் மரியாதை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். முதலீடுகளுக்கு ஏற்ற நல்லநேரமாக அனுமன் ஜெயந்தி இருக்கும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

WhatsApp channel

டாபிக்ஸ்