Astro Tips: காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிஷ்டம் கொட்டும் தெரியுமா?
நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை பார்ப்பது மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது நாம் அந்த நாளில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. அப்படி நாம் காலையில் எழுந்ததும் பார்க்க கூடிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.
நாம் சில நேரங்களில் சிலர் புலம்புவதை பார்த்திருப்போம். இன்னைக்கு காலங்காத்தால யார் முகத்தில் முழிச்சேனோ எல்லாமே கஷ்டமாக இருக்கிறது. இன்று அடி மேல் அடி என்று வருத்தப்படுவார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதேசமயம் சில நல்ல விஷயங்கள் நடக்கும்போது நான் இன்று இன்னார் முகத்தில் விழித்தேன் அந்த ராசிதான் இந்த வெற்றிக்கு காரணம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த வகையில் நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை பார்ப்பது மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது நாம் அந்த நாளில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. அப்படி நாம் காலையில் எழுந்ததும் பார்க்க கூடிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.
நாம் காலையில் எழுந்தவுடன் எதை நாம் பார்க்கிறோமோ அது அன்றைய நாள் முழுவதும் அந்த நியாபகம் நமக்கு இருக்கும்.
அப்படி காலையில் எழுகின்றபோதே இளம் காலைப்பொழுதில் நல்ல சுற்றுச்சூழலில் எழ வேண்டும்.
காலையில் எழுந்தவுடம் நம் கைகள் இரண்டையும் நன்றாக தேய்த்து நம் கண்களில் ஒத்தி எடுத்து உள்ளங்கையை பார்க்கலாம்.
நமது உள்ளங்கைகளில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
நாம் இரு உள்ளங்கைகளையும் பார்த்தாலும் சரி , ஒரு உள்ளங்கை பார்த்தாலும் சரி அது மிகவும் நல்லது. மகாலெட்சுமியை மனதில் நினைத்து உள்ளங்கையை பார்ப்பது சிறப்பான விழிப்பு தரிசனம் ஆகும்.
பின்னர் பூரண கும்பம், கோயில், கோபுர தரிசனம், பசுமாடு, கன்றுக்குட்டி, இயற்கை காட்சிகள், பூத்துக்குலுங்கும் மலர்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீறு உள்ளிட்ட மங்கலம் நிறைந்த அனைத்து விஷயங்களையும் நாம் பார்க்கலாம். கடவுளின் முகங்களை கூட பார்க்கலாம். ஆனால் படுக்கை அறையில் கடவுள் படத்தை வைத்து பார்க்கலாமா என்ற கேள்வி வரும்.
முகம் பார்த்தல்
இதேபோல் தினமும் காலையில் எழுந்ததும் கணவன் மனைவியின் முகத்தை பார்க்கலாம். மனைவி கணவனின் முகத்தை பார்க்கலாம்.குழந்தைகள் பெற்றோர்கள் முகத்தில் விழிக்கலாம். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் முகத்தில் விழிக்கலாம். இது மிகுந்த நன்மைகளை தரும்.
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.