vehicle number: வாகனப் பதிவு எண்ணில் இருக்கும் லக் தெரியுமா?
வாகனப்பதிவு எண் குறித்து, சோதிடத்தில் எண் கணிதம் கூறுவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
அனைவரும் புதுவாகனத்தை வாங்கும்போது, தங்கள் வாகனத்தின் எண்ணைப் பெறும்போது, பிடித்தமான ராசியான எண்களை அதிகப் பணம் கொடுத்து பெறுவார்கள். அப்படி எண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால், சோதிடம் அதனை தெளிவுபடுத்துகிறது.
நாம் வாங்கும் வாகனங்களின் இறுதி 4 எண்களின் கூட்டுத்தொகை இவ்வாறு வந்தால், இவ்வாறு பலன்கள் கிட்டும் என சோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வைத்துப் பார்க்கும்போது, வாகனத்தின் கூட்டுத்தொகை 9 மற்றும் 4 என வந்தால், அது அனைத்துவிதமான பயன்பாட்டுக்கும் பொதுவானது.
2, 7ஆகிய எண்கள் கூட்டுத்தொகையாக வந்தால் ஆடம்பர பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்திற்கு, அந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டுத்தொகை 3 என வந்தால், பைனான்ஸ் கம்பெனிக்கு நாம் வாங்கும் வாகனத்தை வைத்துக் கொள்ளலாம். கூட்டுத்தொகை 6 என வந்தால், மருத்துவமனை போன்ற உபயோகத்துக்கு வாகனத்தை உபயோகப்படுத்தலாம். இதுவே கூட்டுத்தொகை 1 என வந்தால் ராணுவ வீரர்கள் வைத்துக்கொள்ளலாம். 8 என கூட்டுத்தொகை வந்தால் இரும்பு மற்றும் ஹார்டுவேர் கடைகள் வைத்திருக்கும் நபர்கள், அபரிவிதமான பலன்களைப் பெறுவர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்