Siddar Vazhipadu: உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சித்தரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமாெ?-do you know the benefits of worshiping the siddha of your birth star - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Siddar Vazhipadu: உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சித்தரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமாெ?

Siddar Vazhipadu: உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சித்தரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமாெ?

Manigandan K T HT Tamil
Apr 03, 2024 10:43 AM IST

Siddar: எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருப்பது போல், இதற்கும் ஓர் தீர்வு இருக்கிறது. அது என்ன என்றால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்குரிய சித்தரை வணங்குதல் ஆகும். சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள்தான் சித்தர்கள். சித்தர்கள் தங்கள் ஸ்தூல உடலை துறப்பதையே ஜீவ சமாதி அடைதல் என்றழைக்கிறோம்.

வழிபாடு
வழிபாடு (Pixabay)

சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமானவை.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட திதி, ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

எந்த நட்சத்திரம், எந்த திதியில் பிறந்திருந்தாலும், அவரவர் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணியங்கள் அடிப்படையிலேயே அவரவர் வாழ்க்கை அமையும் என நம்பப்பட்டு வருகிறது.

ஆனால், பல பாவ வினைகளுடன் இருக்கும் மனிதர்கள் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களால் அவர்களுக்கு உரிய அருள் கிடைக்காமல் தடுத்து நிற்கும் என கூறப்படுகிறது.

ஆனால், எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருப்பது போல், இதற்கும் ஓர் தீர்வு இருக்கிறது. அது என்ன என்றால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்குரிய சித்தரை வணங்குதல் ஆகும்.

சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள்தான் சித்தர்கள். சித்தர்கள் தங்கள் ஸ்தூல உடலை துறப்பதையே ஜீவ சமாதி அடைதல் என்றழைக்கிறோம்.

அப்படி ஜீவ சமாதி அடைந்த சித்தர்களை வணங்கி வழிபடும்போது அவர்கள் சூட்சுமமாய் அருளாசி வழங்குகிறார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

சித்தர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனையே நினைத்து ஒவ்வொரு நொடியும் இறைவனின் திருநாமத்தை கூறி சமாதி நிலையை அடைகின்றனர்.

எந்த சித்தர் எந்த கடவுளை இஷ்ட தெய்வமாக வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவ சமாதி மேலோ அல்லது அதன் அருகிலேயோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

பெரும்பாலான சித்தர்கள் சிவபெருமானையும், சக்தியையும், முருகனையும், விநாயகரையும் வழிபட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு போகர் சித்தர் பழனியில் தண்டாயுதபாணியை வழிபட்டார். பழனி முருகனை வழிபடும் முறைகளைப் பின்பற்றி நாம் வணங்கினால், அவர் மனம் குளிர்ந்து அருளாசி வழங்குவார்.

குறிப்பாக 18 சித்தர்களை வழிபடுவதும் அவர்களின் குறிப்புப்படி வாழ்வதும் மிக நல்ல பலன்களை தரும் என கூறப்படுகிறது.

உங்கள் பிறந்த நாளில் அல்லது நீங்கள் பிறந்த திதி, நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் யாரென அறிந்து கொண்டு அவரை வழிபட வேண்டும்.

பூஜை அறையில் அமர்ந்தும் உங்கள் ஜென்ம ராசிக்குரிய சித்தரை வழிபடலாம். மனதை ஒருமுகப்படுத்தி நீங்கள் பிரார்த்தனை செய்தால் போதும். தினமும் ஒரு சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டுக்கு ஒதுக்கி வளம் பெறுவோம்.

சித்தர்கள் சூட்சுமமான முறையில் பல பூஜைகளை நமக்காக உருவாக்கித் தந்திருக்கின்றனர். தாந்திரீக முறையில் சித்தர்கள் அதுபோன்ற பூஜைகளை அருளியிருக்கின்றனர்.

ராசி என்பது உயிர். லக்கினம் என்பது உடல். நமது வாழ்க்கையில் இன்னல்களும் இருக்கின்றன. சந்தோஷங்களும் நிறைந்திருக்கின்றன.

கடகத்துக்கு சந்திரப பகவான். சந்திரபகவானுடைய அதிதேவதை அம்மன். அலங்காரமாக இருக்கிற எல்லா அம்மனும். அம்மனுக்கான மரம் என்ன புரசு.

சந்திரபகவானுக்கு உகந்த ஒரு செடி புரசு. நீங்கள் பிறந்த கிழமையில் புரசு செடியை ஒரு தொட்டியில் வைத்து வளர்க்கத் தொடங்குங்கள். மஞ்சள்-குங்குமம் வைத்து வழிபடுங்கள்.

15 முறை சந்திரபகவானே நமஹ என சொல்லுங்கள். செடி வைத்த 15 நாட்களுக்குப் பிறகு பிறந்த நட்சத்திர நாளன்று அந்தச் செடியை எடுத்துக் கொண்டு உங்கள் குல தெய்வம் கோயிலுக்கு செல்லுங்கள். அந்தக் கோயிலில் 15 நிமிடங்கள் அமைதியாக இருந்து கோயிலின் நந்தவனத்தில் அந்தச் செடியை நட்டு வைத்து விட்டு வாருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்