Numerology: மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாக இருக்கும் தேவதை எண் 111 பற்றி தெரியுமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?
Numerology: மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாக இருக்கும் தேவதை எண் 111 பற்றி தெரியுமா? இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? என்பது குறித்துப் பார்ப்போம்.
Numerology: பெரும்பாலும் நீங்கள் 111, 222, 333 அல்லது 11:11 போன்ற எண்களை மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள்.
இந்த எண் தோற்றத்தில் மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும், எண் கணிதத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல நேரங்களில் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கும்போது 11 மணியைப் பார்ப்பீர்கள். எண் கணிதத்தில், இந்த எண்கள், தேவதை எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. எண் கணிதத்தின்படி, கார் நம்பர் பிளேட், வீட்டு முகவரி மற்றும் டிஜிட்டல் கடிகாரங்கள், பில்கள், அட்டைகளில் இதுபோன்ற எண்களைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த எண்களை அடிக்கடி பார்ப்பது ஒரு நபரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்று நம்பப்படுகிறது. எண் கணிதத்தில் 11:11 என்றால் என்ன தெரியுமா?
11:11 என்றால் என்ன?
எண் கணிதத்தின்படி, அதிர்ஷ்ட தேவதை எண் 11:11 வெற்றிப்பாதையில் முன்னேறத் தூண்டுகிறது. இது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த எண் மீண்டும் மீண்டும் தோன்றும்போது, காதல், தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் அதிர்ஷ்டம் துணைபுரிகிறது என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெரும் வெற்றி கிடைக்கிறது என்றும் நம்பப்படுகிறது. தொழிலில் வரும் பிரச்னைகள் சமாளிக்கப்பட்டு வாழ்க்கை நேர்மறையான அம்சத்துடன் தொடங்க இந்த எண்கள் உதவுகின்றன.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்:
எண் கணிதத்தின்படி, தேவதை எண் 11:11 காணப்படும்போது, ஒருவருக்கு உறவின் புதிய தொடக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இந்த எண்ணை நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்தால், அது மிகவும் மங்களகரமான அறிகுறியாக நிரூபிக்கப்படலாம். இது உறவுகளில் காதல் மற்றும் அன்பை அதிகரிக்கிறது. மேலும் இது துணையுடனான உறவை பலப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, இது சிங்கிளாக இருப்பவர்களுக்கு அன்பான நபர்களைத் தேடிக் கண்டடைதலில் உதவும் எண்ணாக, புதிய தொடக்கத்தின் அடையாளமாக இந்த எண் இருக்கலாம்.
எண் கணிதத்தின்படி, 11:11 கூட்டுத்தொகையோ, அடிக்கடி பார்ப்பதோ, மீண்டும் மீண்டும் அத்தகைய தேதியில் ஆர்டர்களைப் பெறுவதோ, தொழில் வாழ்க்கையில் பல பெரிய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும்.
தொழில் வாழ்க்கையில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் இருக்கலாம். படைப்பாற்றல் மற்றும் புதுமையான யோசனைகளுடன் செய்யப்படும் வேலையில் பெரும் வெற்றியைக் காணலாம். பணிகளில் இருந்த தடைகள் நீங்கும். இந்த நல்ல எண் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் காரணியாக கருதப்படுகிறது. இதனால் தான் நாம் பல இடங்களில் 11, 22, 33 ஆகிய எனும் எண்களை அடிக்கடி நாம் பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்