Kula Deiva Vazhipadu: எல்லா தோஷங்களும் தீர குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்யுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kula Deiva Vazhipadu: எல்லா தோஷங்களும் தீர குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்யுங்க!

Kula Deiva Vazhipadu: எல்லா தோஷங்களும் தீர குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்யுங்க!

Manigandan K T HT Tamil
Sep 07, 2023 06:27 PM IST

5ம் அதிபதியும், 9ம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், குலதெய்வத்தை நீங்கள் நினைக்கும்போதெல்லாம் சென்று தரிசனம் செய்யலாம்.

குலதெய்வ கோயில்
குலதெய்வ கோயில்

உங்கள் வம்சாவளியினரின் வெற்றியை நிர்ணயித்த இடம்தான் குலதெய்வ கோயில். குலதெய்வம் என்பது முந்தைய தலைமுறையினர் சென்று வழிபட்ட இடம் ஆகும்.

குல்தெய்வத்துக்கு முக்கியமான குறிக்கும் கிரகங்கள் சூரியன், குரு. இவர்கள் இருவரும் உங்கள் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் மறைமுகமாக குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது என அர்த்தம்.

அதேபோன்று உங்கள் ஜாதகத்தில் 5, 9ம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருந்தார்கள் என்றால், குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இருக்கிறது என அர்த்தம்.

5ம் அதிபதியும், 9ம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், குலதெய்வத்தை நீங்கள் நினைக்கும்போதெல்லாம் சென்று தரிசனம் செய்யலாம்.

ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை வழிபாடும், பெண் தெய்வமாக இருந்தால் பெளர்ணமி வழிபாடு மிகவும் சிறந்தது என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

இறைவன், இறைவி இருவரும் குலதெய்வமாக இருந்தால், அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரு தினங்களும் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.

தேங்காயை உடைத்து, சுத்தமான பசு நெய்யில் விளக்கு ஏற்றுங்கள். பஞ்சுத் திரியில் விளக்கு ஏற்றுங்கள். நீங்கள் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும். குலதெய்வத்திற்கு வஸ்திரம் சாத்தியும் வழிபடலாம். ஏழரை சனி இருந்தால் இதை செய்யுங்கள்.

வருஷத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள். குலதெய்வம் உங்களை காக்கின்ற கடவுள் என்பதால் நிச்சயம் நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு முறையாவது சென்று வழிபாடுங்கள்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்