Nithya Kalyana Perumal: தினம் திருமணம் நடக்கும் திவ்யதேசம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nithya Kalyana Perumal: தினம் திருமணம் நடக்கும் திவ்யதேசம்

Nithya Kalyana Perumal: தினம் திருமணம் நடக்கும் திவ்யதேசம்

Manigandan K T HT Tamil
Jul 28, 2023 03:52 PM IST

மஹாவிஷ்ணு, தமது 3வது அவதாரமான வராஹ ரூபத்தில்,பலியின் முன்பு, பிரசன்னமாகி,அவருக்கு வேண்டிய வரமளித்தபோது, அந்த இடத்தின் அழகில் மயங்கி நின்ற பகவானை, அதன் ரம்யம் ஈர்க்க,பலியும் வேண்ட, அங்கேயே தங்கி விட்டார்.

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில்
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில்

அவர்கள் தேவர்களிடம் போரில் தோற்றுப்போய் பலியிடம் அடைக்கலமாகி, பலியைத் தமக்கு உதவிகள் செய்ய வேண்டி நிர்பந்தப் படுத்தினார்கள்.

நண்பர்கள் வேண்டுதலை ஏற்று பலி, தேவர்களுடன் போரிட்டு, வெற்றிக் கனி பறித்துக் கொடுத்து விட்டார். இதில் தேவர்கள் பலரும் பாதிக்கப்பட்டதன் காரணமாக பலி அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் போன்றவை ஏற்பட, அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக,இப்போதைய திருவிடத்தை தலத்திற்கு வந்து, கடும் தவத்தில் ஈடுபட்டார்.

மஹாவிஷ்ணு, தமது 3-வது அவதாரமான வராஹ ரூபத்தில், பலியின் முன்பு, பிரசன்னமாகி, அவருக்கு வேண்டிய வரமளித்தபோது, அந்த இடத்தின் அழகில் மயங்கி நின்ற பகவானை, அதன் ரம்யம் ஈர்க்க, பலியும் வேண்ட, அங்கேயே தங்கி விட்டார்.

இதே நேரத்தில் குனி எனும் பெரிய தவசீலர், முனிவர், தம் பெண்ணுடன், சொர்க்கம் செல்வதற்காக, தினமும் வேண்டி, தீவிர தவமிருந்து ஒருவழியாக அவருக்கு மட்டும் செல்ல அனுமதி கிடைத்தது. பெண் திருமணம் ஆகவில்லை என்பதால் செல்லமுடியாது போயிற்று. 

காலச்சக்கரம் உருள, காலவ ரிஷி என்பவர் தீவிர நாராயணனின் பக்தர் இப் பெண்ணை விரும்பி, திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். பருவ வயது வந்ததும், தம்முடைய பெண்களை ஸ்ரீமன் நாராயணனே மணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆவல் கொண்டு, அதற்கான தீவிர முஸ்தீபுகள், முயற்சிகளில் இறங்கினார்.

கடுமையான தவத்திலும் ஈடுபட்டார். இறுதிவரை, பகவான் வரவே இல்லை. ஏக்கத்தின் உச்சியில் காலம் கழிந்து கொண்டிருந்தது.

ஒருநாள், தேச யாத்திரை செய்து கொண்டு, இவர் ஊருக்கு வந்த அழகான பிரமச்சாரிய இளைஞன் ஒருவனது, நடை, உடை, பாவனை இத்யாதிகள் முனிவரின் கவனத்தைக் கவர்ந்து, அவையனைத்தும் ஸ்ரீமன் நாராயணைனை நினைவு படுத்த, அவனிடமே தமது பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முறைப்படி வேண்டிக் கொள்ள, அவரும் சம்மதம் தெரிவித்து ஒத்துக் கொண்டார்.

அதன்படி, 360 நாட்களிலும், ஒருநாளைக்கு ஒரு பெண் என்கிற முறையில் திருமணம் செய்து கொண்டார். இதில் முதல் பெண்ணின் பெயர் கோமளவல்லி. கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கி, அகிலவல்லி நாச்சியார் என நாமகரணம் சூட்டி, தமது இடப் பக்கம் வைத்தபடி தன் தனது சுய ரூபத்தைக் காட்டி அருளினார்.

அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று வந்தனர்.

பல்லவ அரசர்களால் இங்கு நித்ய கல்யாண பெருமாள் எனும் பெயரில் ஆரம்பத்தில் ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவாகிய இலக்குமியைத் தம் இடப் பக்கத்தில் வைத்திருக்கும் காரணத்தால் ஊரின் பெயர் திருவிடத்தை என்றானது. இதுதவிர, ஸ்ரீபுரி, கல்யாண புரி, வராஹ புரி போன்ற பல பெயர்களும் உண்டாம். இது ஒரு கடற்கரை கிராமம். சென்னை மகாபலிபுரம் சாலையில், கோவளம் பேருந்து நிலையம் அருகே அமைந்த ஆலயம் இது.

மூலவரும், உற்சவரும், நித்ய கல்யாணப் பெருமாள் இங்கு ஸ்ரீ தேவி, பூதேவி சகிதம் காட்சிதரும் மூலவர்க்கு, லட்சுமி வராஹப் பெருமாள் எனப் பெயர். இவ்வாலயத்தில் வைகாயைம் எனும் முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. 108 வைணவ தேசங்களில் இது 63வது சேக்ஷ்த்ரம். இங்கு மட்டுமே பெருமாளுக்கு 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

திருமணத்தடை, திருஷ்டி, தோஷம், ராகு-கேது தோஷம் சுக்ர தோஷம் போன்ற தோஷ நிவாரண தலமாக இதை குறிப்பிடுகிறார்கள். 

பரிகார தலமாகிய இங்கு பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளை மார்கண்டேய மகரிஷி, தரிசனம் செய்ததார் என தெரிகிறது.

தம்பதி சமேதராக 61/2 அடி உயரத்தில், ஆதிவராஹ பெருமாள் சேவை சாதிப்பது இங்கு மட்டுமே. உபநிஷ கருத்துகளுக்கு உறைவிடம் வராஹர் என்பர். வராஹ தீர்த்தத்தில் மாசி மாத நீராடலும், சித்திரை மாத கல்யாண தீர்த்த நீராடலும் மிக சிறந்து என்பதை ஆதி வராஹப் பெருமாள் பலி அசுர மன்னருக்கு தந்திட்ட அருள் வாக்கு என்கிறார்கள்.

மன்னர் ராஜராஜன் போன்ற அரசர்கள் செய்த திருப்பணி கொடைகள் போன்ற பல செய்திகளைக் கூறும் கல்வெட்டுகள் உள்ளன. இத்தலத்தில் தேவி மூலமாக "சரமாஸ்லோகத்தை" உபதேசிக்கும் திருக்கோலம் என்கிறது ஆகமங்கள்.

கோமளவல்லிபுரம் என்பது மருவி நாளடைவில் கோவளம் என்றானதாம். பெசன்ட் நகரிலுள்ள தமிழ் தாத்தா உ.வே.சா. நூலகத்தில் "108 திருப்பதி வண்ண விருத்தம்" எனும் ஓலைச்சுவடி நூலில் இந்த ஆலயம் குறித்த பாடல் உண்டென்பர்.

திருமங்கை ஆழ்வார், அழகிய மணவாள தாசர், குரலை ராமானுஜ தாசர் முதலானோர், தமது 108 திருப்பதி அந்தாதி, 108 திருப்பதி திருப்புகழ் ஆகியவற்றில் சிறப்பித்துப் போற்றிப் பாடியுள்ளனர்.

மஹாவிஷ்ணுவின் வராக அவதாரம் சம்பந்தப்பட்ட, சுமார் 1400 ஆண்டுகள் பழமையான, இவ்வாலய சிறப்பு பற்றி நாலாயிர திவ்யப் பிரபந்தம் கூறும். முதன்முதலில் "சதபத பிரமாணத்தில் தான்" குறிப்பிட்டுள்ளதாக அறிஞர் பலரும் கூறுவர். சங்க இலக்கியமான பரிபாடலில் வராஹ பெருமான் குறித்த செய்திகள் காணப்படுகிறது

வராஹ பெருமாள், தனது, ஒரு திருவடியை பூமியில் ஊன்றி, இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கிக்கொண்டு வராஹ மூர்த்தியாக காட்சி தருகிறார். விஷ்ணு பகவான் வராஹ அவதாரம், முஷ்ணம் எனும் பன்றி வடிவம் கொண்டு, பூமியைத் தாங்கிய விபரங்களைப் பல நூல்களும் தெரிவிக்கும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த திருவிடத்தை நித்ய கல்யாணப் பெருமாளை தரிசித்து அருள் பெறுவோம்.

கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்