தமிழ் செய்திகள்  /  Astrology  /  Dindugal Vettaikaran Temple Festival

‘வேட்டைக்காரன் கோயில் திருவிழா‘ – ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 12:25 PM IST

Temple Festival : நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது.

வேட்டைக்காரன் கோயில் திருவிழா
வேட்டைக்காரன் கோயில் திருவிழா

ட்ரெண்டிங் செய்திகள்

விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி நேற்று இரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்தில் அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.

இன்று நடந்த கறி விருந்தில் புண்ணபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் இருபாலரும் தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார். சில கோயில்களில் மட்டும் ஆண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். அதுபோன்ற கோயில்களுள் இந்தக்கோயிலும் ஒன்று.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்