HT Yatra: ராமபிரானை உபசரித்த பரத்வாஜ்.. சூரிய ஒளி படும் லிங்கம்.. அருள்தரும் மகாலிங்கேஸ்வரர்
Arulmigu Mahalingeswarar Temple: சிவபெருமான் மீது அனைவரும் பக்தியாக இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியில் உள்ள அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார். திரும்பும் திசையெல்லாம் உலகத்தில் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மன்னர்கள் காலம் தொடங்கி மக்கள் தற்போது வாழும் காலம் வரை சிவபெருமானுக்கு தீராத பக்தர்கள் கூட்டம் இருந்தப்படுகிறது. இந்தியாவின் சிவபெருமானுக்கு என மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருபவர்களும் உள்ளன.
மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இராஜராஜ சோழன் சிவபெருமானை குல தெய்வமாக வணங்கி வந்துள்ளார் குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதிகளில் சிவபெருமானின் மூல ஆதார கடவுளாக விளங்கி வந்துள்ளார். நாட்டிற்காக பல மன்னர்கள் போரிட்டாலும் அனைத்து மன்னர்களுக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
இன்று வரை அசைக்க முடியாத கட்டிடக்கலையோடு சிவபெருமானை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய கோவிலாக தஞ்சை பெரிய கோயில் விளங்கி வருகிறது இந்த கோயிலை கட்டியது சோழர்கள் சாம்ராஜ்யத்தின் மாமன்னர் ராஜராஜ சோழன்.
எத்தனையோ கோயில்கள் எப்பொழுது கட்டியது என்பது கூட தெரியாத அளவிற்கு பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் கம்பீரமாக நின்று வருகின்றன. அவ்வளவு பக்தியாக சிவபெருமான் மீது அனைவரும் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியில் உள்ள அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் மீது 30 நாட்கள் சூரிய ஒளி மூலவர் மீது படுகின்றது குறிப்பாக இது சிவராத்திரி ஒட்டி நடக்கின்றது அது மிகவும் விசேஷ நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. சூரிய கதிர்கள் சிவபெருமானை வணங்குவதாக கூறப்படுகிறது. அப்படியே அந்த ஒலிக்கதிர்கள் மாலை நேரத்தில் அங்கு இருக்கக்கூடிய பைரவர் சிலை மீது படுகிறது.
இந்த திருக்கோயிலில் அம்பிகை இரண்டு சன்னதிகளில் காட்சி கொடுத்து வருகிறார். இது மேலும் சிறப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த திருக்கோயில் வீடு மற்றும் வாஸ்து குறைபாடு நிவர்த்தி தளமாக விளங்கி வருகின்றது. இந்த கோயிலுக்கு வந்து வீடு மற்றும் வாஸ்து குறித்து வழிபாடு செய்தால் அனைத்தும் விரைவில் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தல வரலாறு
சீதையை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்துவிட்டு ராமபிரான் சீதையை மீட்டு வந்தார். அதற்குப் பிறகு அனைவரும் அயோத்தி திரும்பினார்கள். தேவகுருவின் மகனான பரத்வாச்சை ராமபிரான் சந்தித்தார். ராமபிரானுக்கு பரத்வாஜ் உபசரணை செய்தார். அப்போது ராமபிரானோடு சேர்ந்து ஆஞ்சநேயரும் வந்திருந்தார்.
தனக்கு பெரும் உதவியாக இருந்தது ஆஞ்சநேயர் தான் என ராமபிரான் அவருக்கு மரியாதை செய்வதற்காக பரத்வாஜ் உணவு உபசரிப்பு செய்யும் பொழுது ராமபிரான் தனது இலையில் நடுவே ஒரு கோடு போட்டார்.
இலையில் போட்ட உணவை சரிசமமாக பிரித்து ஆஞ்சநேயரையும் சாப்பிடும் படி ராமபிரான் கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகுதான் வாழை விலையில் நடுவில் கோடு வந்ததாக கருணை பரம்பரை என்ற கதையில் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட உபசரணை செய்த பரத்வாஜ் இந்த கோயிலில் இருக்கக்கூடிய மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
மதுரையில் வீற்றிருக்கக்கூடிய மீனாட்சி அம்மனை பிரதிஷ்டை செய்த ஐந்து மிகப்பெரிய மாமுனிவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே மீனாட்சி அம்மனுக்கு பஞ்ச ராஜ மாதங்கி என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9