Karmadhipati Yogam: 2 மற்றும் 6ம் இடதொடர்பு;அரசு வேலையை கயிறு கட்டி இழுக்கும் தர்மகர்மாதிபதி யோகம்- யாருக்கு வாய்க்கும்?
இரண்டாம் இடம் என்பது நமக்கு தனம் வருகிற வழியாகும். ஆறாம் இடம் என்பது கடன்,எதிரி, பொய் போட்டி உள்ளிட்டவற்றை கொடுத்தாலும், கூடவே நல்ல உத்யோகத்தை அது கொடுத்து விடும்.
மேஷ லக்னகாரர்களுக்கு ஜாதகத்தில் என்ன மாதிரியான அமைப்பு இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
இது குறித்து ஜோதிடர் ஸ்ரீ ராம்ஜி தன்னுடைய யூடியூப்பில் பேசியவை!
அரசு வேலையைப் பெற்றுத் தரக்கூடிய அமைப்பு எப்படி வரும் என்று கேட்டால், உங்கள் ஜாதகத்தில் தனாதிபதி என்று சொல்லக்கூடிய இரண்டாம் அதிபதி மற்றும் ருண ரோக, சத்ரு அதிபதியான ஆறாம் அதிபதி, இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தர்மகர்மாதிபதியோடு தொடர்பில் இருந்தால், உங்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகுதியாக இருக்கும்.
இரண்டாம் இடம் என்பது நமக்கு தனம் வருகிற வழியாகும். ஆறாம் இடம் என்பது கடன்,எதிரி, பொய் போட்டி உள்ளிட்டவற்றை கொடுத்தாலும், கூடவே நல்ல உத்யோகத்தை அது கொடுத்து விடும்.
தர்மகர்மாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகளோடு, இந்த இரண்டாம் அதிபதியான தனாதிபதியோ, ஆறாம் அதிபதியான ருணாதிபதியோ தொடர்பில் இருந்தால், அதுவும் லக்னத்திற்கு மறைவில்லாத வீடுகளில் தொடர்பு கொண்டு இருந்தால், அவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
எடுத்துக்காட்டாக மேஷ லக்ன ஜாதகக்காரருக்கு இரண்டாம் அதிபதி சுக்கிரனாகவும்,ஆறாம் அதிபதி புதனாகவும் இருந்து, அவர்கள் ஆறாம் அதிபதியோடு தொடர்பு கொண்டிருந்தால்,அவர்களுக்கு நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும்.
காரணம் சனி,குரு ஆகிய இரண்டு பேரும் தர்ம கர்மாதிபதிகளாக வருவார்கள்.
இதில் சனி என்பது சுக்கிரனுக்கும்,புதனுக்கும் நட்பு கிரகமாக வருவதால், இதில் அரசு வேலை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.இந்த இணைவு ஒன்பதாம் இடத்தில் இருந்தால்,அற்புதமான அரசு வேலை கிடைக்கும்.
மேஷ லக்னத்திற்கு தனுஷில் சனி பகவானும், கூடவே சுக்கிரனும் புதனும் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காரணம், இரண்டு மற்றும் ஆறாம் அதிபதிகளோடு தொடர்பு வந்துவிட்டது. பத்தாம் அதிபதியோடும் தொடர்பு வந்து விட்டது. இதில் குரு இதை எங்கேயாவது இருந்து பார்த்து விட்டாலோ அல்லது தன்னிச்சையாக ஆட்சி ஆகிவிட்டாலோ,கட்டாயமாக அரசு வேலை என்பது கிடைத்தே தீரும்.” என்று பேசினார்.
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்