Guru Vagra Peyarchi 2024: ‘பணம் கொட்ட போகுது பிடிக்க ரெடியா?’ தனுசு ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
Guru Vagra Peyarchi 2024: தனுசு ராசிக்கு குரு பகவான் அதிபதி ஆவார். இந்த காலகட்டத்தில் தொழில் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். தடைகளை தகர்த்து வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வீசிங், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார். கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
தனுசு ராசியும் குரு பகவானும்!
தனுசு ராசிக்கு குரு பகவான் அதிபதி ஆவார். இந்த காலகட்டத்தில் தொழில் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். தடைகளை தகர்த்து வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வீசிங், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின்சாரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். மதிப்பு, மரியாதை, செல்வம், செல்வாக்கு கூடும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தெய்வீக பணிகள், நீதித்துறை, அறநிலையத்துறை, வங்கி, நகை மதிப்பீட்டாளர், வழக்கறிஞர், ஆடிட்டர் தொழில்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
பகை வீட்டில் குரு பகவான்
குருபகவான் ஆறாம் வீடான ரிஷபத்தில், பகை வீட்டில் போய் அமர்ந்தாலும் அந்த வீட்டில் பொறுத்த அளவில் இருந்து பின்னோக்கி வருவதினால் ஜாதகர்களுக்கு கெடுபலன்களை விட நன்மைகளை வாரி வழங்குவார். பத்தாம் வீட்டை குருபகவான் பார்க்கிறார். தொழிலில் அற்புதமான ஞானம் உண்டாகும் காரியங்களிலே வெற்றி உண்டாகும். நீங்கள் வசிக்கும் இடத்தில் மதிப்புகள் கூடும். அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். பணம் பல வகைகளில் வந்து சேரும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும், தூர தேசத்து செயல்பாடுகள் வெற்றி பெறும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு அரசியலில் புதிய பதவிகள் கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த தெய்வ வழிபாடுகள் சீராகும். அப்பாவினுடைய தன வசதிகள் பெருகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பல வழிகளில் வருமானம் பெருகும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அனுகூலம் கிடைக்கும்.
வழிபாடு
குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.