காதலில் ஒரு கண்; காசில் ஒரு கண்.. அடுத்த வாரம் கவனம் மாம்ஸ்.. தண்ணீரில் தத்தளிக்கும் தனுசு! - தப்பிக்க என்ன செய்வது?
காதலில் ஒரு கண்.. காசில் ஒரு கண்..தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் காதல், தொழில், நிதி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த 7 நாட்கள் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர் டாக்டர் ஜே.என்.பாண்டே கணித்து கூறியிருக்கிறார்.
இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தயங்காமல் புதிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள். செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
காதல் வாழ்க்கை: காதல் விஷயத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். புதிய தொடர்புகளை உருவாக்குவதில் உங்கள் காதல் அணுகுமுறை செயல்படும். வாரத்தின் ஆரம்ப நாட்களை காதலைச் சொல்ல பயன்படுத்துவது நல்லது.
நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அதே போல, உங்கள் துணையையும் உங்கள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தலாம். நல்ல மற்றும் கெட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள தயாராக இருங்கள். வார இறுதியில் மனது விட்டு பேசுங்கள். வாரத்தின் கடைசி நாட்கள் நிச்சயதார்த்தத்திற்கு நல்ல நாட்களாக இருக்கின்றன.
தொழில் வாழ்க்கை : சிலருக்கு அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும், இதற்காக நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். குழு மற்றும் வாடிக்கையாளரை நேர்மறையான அணுகுமுறையுடன் கையாள்வது அவசியமாக இருக்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுங்கள். போக்குவரத்து, சிவில் இன்ஜினியரிங் மற்றும் விற்பனைத் துறையுடன் தொடர்புடையவர்கள், இந்த வாரம் பயணம் செய்யலாம். ஃப்ரீலான்சிங்காக வேலை பார்ப்பவர்கள், அதில் உங்களின் திறமையை வெளிக்காட்டி நிரூபிக்க முடியும்.
நிதி வாழ்க்கை: பணம் தொடர்பான சில பிரச்சினைகள் இருக்கலாம். நீங்கள் செலவுகளைக் கண்காணிப்பது முக்கியம். சில பெண்ளுக்கு நகை வாங்கும் யோகம் உண்டாகும். வயதானவர்கள் குடும்பத்தில் சில கொண்டாட்டங்களுக்காக செலவிட வேண்டியிருக்கும். வார இறுதியில், ஒரு புதிய சொத்து வாங்க அல்லது விற்க வாய்ப்பு இருக்கிறது. சில வியாபாரிகள் இந்த வாரம் நல்ல லாபம் காண்பார்கள். ஆனால் அரசாங்க விதிமுறைகள் காரணமாக, நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.
ஆரோக்கிய ஜாதகம்: பெரிய மருத்துவ பிரச்சினைகள் எதுவும் இருக்காது, ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வாரத்தின் ஆரம்ப நாட்களில் கவனமாக இருக்க வேண்டும். மகளிருக்கு வரும் இயல்பான பிரச்சினைகளுக்கு பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஜங்க் உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற பானங்களைத் தவிர்ப்பது முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க உடற்பயிற்சி செய்யப்பட வேண்டும். சில வயதானவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்