Sathuragiri:பங்குனி மாத பிரதோஷம்; அதிகாலை முதலே சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல், ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் (மார்ச் 19) நான்கு நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.