Today RasiPalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.10 எப்படி இருக்கும்?.. உங்களுக்கு சாதகமா? பாதகமா?.. இன்றைய ராசிபலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.10 எப்படி இருக்கும்?.. உங்களுக்கு சாதகமா? பாதகமா?.. இன்றைய ராசிபலன்!

Today RasiPalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.10 எப்படி இருக்கும்?.. உங்களுக்கு சாதகமா? பாதகமா?.. இன்றைய ராசிபலன்!

Karthikeyan S HT Tamil
Jan 10, 2025 06:50 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 10 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

Today RasiPalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.10 எப்படி இருக்கும்?.. உங்களுக்கு சாதகமா? பாதகமா?.. இன்றைய ராசிபலன்!
Today RasiPalan: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று ஜன.10 எப்படி இருக்கும்?.. உங்களுக்கு சாதகமா? பாதகமா?.. இன்றைய ராசிபலன்!

மேஷம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் அதிகரிக்கும்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

மிதுனம்

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். 

கடகம்

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிலையான வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

கன்னி

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

துலாம்

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் புரிதலும் மேம்படும்.

தனுசு

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். 

மகரம்

மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். 

கும்பம்

பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

மீனம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். 

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

Whats_app_banner