Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது.
செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லபலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் புதிய விஷயங்களை ஆராய்வீர்கள். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். வீட்டில் ஆன்மீக பூஜைகளை நடத்துவீர்கள். அலுவலக வேலைகள் பிஸியாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டப்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களுடன் பயணம் செய்வீர்கள். சிலருக்கு குழந்தைகளின் தொழில் பற்றி கவலை இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிகளின் பொறுப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய சாதனைகள் புரிவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.உத்தியோகம் சம்பந்தமாக பயணங்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் இருந்து நிவாரணம் பெறலாம். சமூக கௌரவம் உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். அரசு வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் திறமையால் மகத்தான வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இன்று நீண்ட தூரப் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட கால முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். இன்று, குடும்ப உறுப்பினர்களுடனான சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கியமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் புதிய திட்டத்திற்கான பொறுப்பை நீங்கள் பெறுவீர்கள். வீட்டில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அது மனதை மகிழ்விக்கும்.
விருச்சிகம்
இன்று தொழில் வாழ்க்கை சவாலானதாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பொருளாதார விஷயங்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முதலீட்டு முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கை சாவல் நிறைந்து காணப்படும். சிலர் அலுவலக அரசியலுக்கு இரையாக வேண்டியிருக்கும். சொத்து தொடர்பான தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இரவில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சீராக இருக்கும். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளைத் தேடுங்கள். குடும்ப வாழ்க்கையின் பிரச்சினைகளை உரையாடல் மூலம் தீர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். வீட்டில் சமய நிகழ்ச்சிகளை நடத்தலாம். உத்தியோகத்தில் வளர்ச்சி ஏற்பட சிறந்த வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். இன்று, குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதத்துடன், உங்கள் பணிகள் அனைத்தும் வெற்றியடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்லலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். வியாபார முடிவுகளை கவனமாக எடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து நிவாரணம் பெறுவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.