Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லபலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு நீடித்து வந்த சர்ச்சைகள் இன்று முதல் குறையும். பணியிடத்தில் செய்யும் வேலைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த நாளை செலவு செய்வீர்கள். பயணம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சிலருக்கு சொத்து அல்லது செல்வம் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்பாடு அடையும். பங்குச் சந்தையில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களிட, இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் இன்றைய நாளில் சில முதலீடுகளை செய்வீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகளுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். விடுமுறைக்கு பயணங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். பிரச்னைகளை தீர்க்க வாழ்கை துணை உடன் பேசுங்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு உள்ள பணப்பிரச்னைகளுக்கு நன்பர்கள் உதவுவார்கள். உங்கள் செயல்பாடுகள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு ஏற்படும். நீங்கள் விரும்பும் ஒருவருடன் பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். பழைய பாக்கிகள் வசூல் ஆகி ஆனந்தம் தரும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய முதலீடுகள் பலன் தரும். அலுவலகத்தில் விதிகளை மீறாமல் செயல்படுவது அவசியம். ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டிய நாள். மாணவர்கள் தேர்வுகளுக்கு சிறப்பாக தயார் ஆவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பணவிவகாரங்களில் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பது நல்லது. சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான முன்முயற்சிகளை எடுக்க இதுவே சரியான நேரம். குடும்பத்தினர் உடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியை தரும். பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் புதிய பயணங்களை திட்டமிடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் ஆக இருப்பது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த நாளில் நிதி நிலைமை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் சில குழப்பங்கள் இருக்கலாம். சிலரின் மூலம் வரும் தகவல்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சுற்றத்தாரின் பாராட்டுக்களை பெற்று மகிழ்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கேளிக்கை நிறைந்தாக இருக்கும். டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வீட்டில் ஏற்பட்ட பழுதுகளை சீர் செய்வீர்கள். நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்வதன் மூலம் நன்மைகளை பெறுவீர்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். லாபகரமான முதலீட்டு வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பார்கள். உங்கள் வாழ்கைத் துணை மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்கார்கள் நிதி ரீதியாக சில சவால்களை சந்திப்பீர்கள். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் இனிமையாக இருக்கும். புதிய பயணங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். வாழ்கைத் துணை உடன் நேரம் செலவிடுவீர்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இந்த நாளில் தியானம் செய்வது நன்மைகளை தரும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் எந்த பணிகளையும் நிலுவை வைக்க வேண்டாம். நெருங்கியவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.