துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Nov 14, 2024 07:49 AM IST

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 14) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க! (freepik)

துலாம்

உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோகப் பணிகளில் தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

தனுசு

புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

மகரம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அசதிகள் விலகும் நாள்.

கும்பம்

சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் விழிப்புணர்வு வேண்டும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

மீனம்

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வர்த்தக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்